குளிர்காலத்தில் பெரும்பாலானோர் ஸ்வெட்டர் அணிந்து தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். கம்பளி ஆடைகள் வெப்ப கடத்தியாக செயல்பட்டு, உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை தடுத்து, உங்களை கதகதப்பாக வைத்திருக்கும். இதனால் பலரும் இரவில் ஸ்வெட்டர், கம்பளி சாக்ஸ் அணிந்து தூங்க விரும்புகிறார்கள். ஆனால் இதனால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இங்கு காண்போம்.,
தூக்கமின்மை : குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இத்தகைய நேரங்களில் ஸ்வெட்டர், கம்பளி ஆடைகளில் தூங்குவதால் பதட்டம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையை தவிர்க்க பருத்தி ஆடை அணிந்து தூங்குவது நல்லது.
சொறி அல்லது அரிப்பு : இரவில் கம்பளி உடையில் தூங்கினால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் தோலில் சொறி அல்லது அரிப்பு ஏற்படலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் முகப்பரு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனவே சரும வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் சருமம் ஈரமாக இருக்கும்போது ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே ஸ்வெட்டர் அணிந்து தூங்கும் கட்டாயம் ஏற்பட்டால் தூங்குவதற்கு முன் பாடி லோஷன் பயன்படுத்துவது நல்லது.
இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகளுக்கான பிரச்சனைகள் : உங்களுக்கு இதய நோய் இருந்தால் இரவில் கம்பளி ஆடை அணிந்து தூங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பருத்தி துணிகளுடன் ஒப்பிடும்போது கம்பளி ஆடை தடிமனாக இருக்கிறது. இதனால் நமது உடல் கதகதப்பாக இருக்கிறது. இந்த வெப்பம் நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஆபத்தானது. எனினும் மிகவும் குளிராக இருந்தால், முதலில் பருத்தி ஆடை அணிந்து அதற்கு மேல் கம்பளி ஆடை அணியலாம். ஆனால் இதனை கடுமையான குளிர்காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு ஆபத்து : குழந்தைகளுக்கு குளிராமல் இருக்க அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து தூங்க வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம். ஆனால் இதனால் குழந்தைகளுக்கு தூக்கம் வராமல் அசவுகரியம் ஏற்பட்டு அழுவார்கள். மேலும் ஸ்வெட்டர் அணிந்து தூங்குவதனால் உடல்சூடு குறைந்து நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு எண்ணற்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.