ஆரஞ்சு பழத்தில் இனிப்பு சுவை மட்டுமல்ல... இத்தனை நன்மைகளும் அடங்கியுள்ளன...
தற்போது ஆரஞ்சு பழ சீசன் தொடங்கியிருக்கிறது. சாப்பிடுவதற்கு எளிதாகவும், மிகுந்த சுவையுடையதுமான ஆரஞ்சு பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Web Desk | January 19, 2021, 6:22 PM IST
1/ 7
பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள், அந்தந்த காலகட்டங்களில் நமது உடலில் ஏற்படும் நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது ஆரஞ்சு பழ சீசன் தொடங்கியிருக்கிறது. சாப்பிடுவதற்கு எளிதாகவும், மிகுந்த சுவையுடையதுமான ஆரஞ்சு பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி நிறைந்திருப்பதுடன், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.
2/ 7
இதய ஆரோக்கியம் : இதய ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்க்கைமுறை மாற்றத்தால் பெருகிவரும் வரும் நோய்களில் இதய நோய் முதன்மையானதாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவு, மாறுபட்ட உணவுமுறை ஆகியவை இதயநோய் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. அண்மைக் காலமாக, 30 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
3/ 7
இதனால், இதய ஆரோக்கியத்தை பேணுவதில் ஆரஞ்சு பழச்சாறு உதவுகிறது. இதில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் (flavonoids ) இதயத்தில் உருவாகும் ஹெஸ்பெரிடின் ஆகியவை கொழுப்பைக் குறைத்து, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. மாரடைப்பு, மற்ற இதய நோய்கள் வராமல் பாதுகாக்கவும் ஆரஞ்சுப் பழம் உதவுகிறது. முடி உதிர்தலைத் தடுக்கிறது ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி (Vitamin C) ஊட்டச்சத்து, கொலஜன் புரத உற்பத்திக்கு உதவுகிறது.
4/ 7
சிறுநீரக கல்லைத் தடுக்கும் : சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு ஆரஞ்சு பழம் உதவுகிறது. இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் சிட்ரேட்டுகள் சிறுநீரகத்தில் கல் (Kidney Stone) உருவாவதைத் தடுக்கின்றன. ஒரு கப் ஆரஞ்சில் 4.3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால், இது செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
5/ 7
அத்துடன், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்கள் வயிறு நிரம்பியிருக்கும். வயிறு உப்புசம் ஏற்படாது. தயமின், ரிபோஃபிளேவின் (riboflavin), நியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்டவை ஆரஞ்சு பழத்தில் இருக்கின்றன. ஆரஞ்சுப் பழங்களில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
6/ 7
இரத்த சோகையில் இருந்து விடுபடலாம் : இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் இரும்பு சத்து இல்லாவிட்டாலும், அவற்றில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் செரிமான செயல்பாட்டின்போது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து உட்கொண்டால் இரத்த சோகையைத் தடுக்க (Keeps Anaemia away) உதவுகிறது. நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கும். ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் டி லிமோனின் (D limonine), நுரையீரல், மார்பக, தோல் புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
7/ 7
தொண்டை புண்ணால் அவதியடைந்து வருபவர்கள் ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொண்டால் விரைவாக அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம். ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஆரஞ்சு மற்றும் கிரேப் புரூட்டை உட்கொள்வதால் பக்கவாதத்தின் அபாயம் குறையும்.