உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் வாட்டர் (எலுமிச்சை நீர்) பல்வேறு காரணங்களுக்காக மக்களால் பெரிதும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக உள்ளது. எலுமிச்சை சாற்றை எடுத்து சாதாரணமாக நாம் குடிக்கும் தண்ணீரில் மிக்ஸ் செய்து ஜூஸ் போன்று தயாரிப்பதே லெமன் வாட்டர். லெமன் வாட்டரின் புளிப்பு மற்றும் அதில் லேசாக நாம் கலக்கும் சர்க்கரை அல்லது ன் இனிப்பு இரண்டும் சேர்ந்து தரும் கலவையான சுவைக்கு பலரும் அடிமை.
சுவையோடு மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை தருகிறது. உடல்நன்மைகளுக்காக இனிப்பு கலக்காமல் லெமன் வாட்டரை குடிக்கும் பழக்கம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் எலுமிச்சை பானத்தை அப்படியே அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்தோ குடிக்கின்றனர். இதனிடையே சிலர் வெதுவெதுப்பான நீரில் லெமன் வாட்டர் தயாரித்து குடிக்கின்றனர். இதனால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
லெமன் வாட்டரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்: எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. ஒரு எலுமிச்சையிலிருந்து கிடைக்கும் ஜூஸானது ஒரு நபரின் டெய்லி வேல்யூவில் (daily value) 21% வழங்குகிறது. கூடுதலாக இந்த சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை பழத்தில், ஃபிளாவனாய்டுகளில் நிறைந்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இனிப்பு கலக்காத லெமன் வாட்டரில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், சர்க்கரை குறைவாக உள்ளன. ஆனால் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் உள்ளன.தினமும் லெமன் வாட்டர் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்கின் கண்டிஷனை மேம்படுத்தும் :எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் சி சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், எலுமிச்சை நீர் குடிப்பது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும். வயதாகும் சரும அறிகுறி மற்றும் முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கும். தினமும் வெதுவெதுப்பான லெமன் வாட்டர் குடிப்பது சருமத்தை பளபளப்பாக்கும்.
செரிமான மேம்பாடு : அடிக்கடி மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுவோர் உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான லெமன் வாட்டரை குடிப்பது மேற்காணும் செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். மேலும் இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மற்றும் எடையை குறைக்க உதவும். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் அதிகப்படியான எலுமிச்சை பயன்பாடு பற்களின் எனாமலை கரைக்க கூடும்.எனவே நாளொன்றுக்கு 1 அல்லது 2 கிளாஸ் லெமன் வாட்டரை குடிப்பதே நல்லது. சற்று சூடான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சிறிது ஆறிய பிறகு வெதுவெதுப்பாக குடிக்கலாம். அல்லது எலுமிச்சை நன்றாக கழுவி, பின்னர் அதை ஸ்லைஸாக கட் செய்து, அதில் சில ஸ்லைஸ்களை ஒரு கப் சூடான நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.