1. மலச்சிக்கல் : தற்போதைய நிலையில் பெரும்பாலானோர் மலச்சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். மலச்சிக்கலை எதிர்கொள்பவர்களுக்கு இஞ்சி டீ ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீயை இளம் சூட்டில் அருந்தினால் உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். மேலும், தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இஞ்சி டீயை அருந்தலாம். இது உங்களை இயல்பான நிலைக்கு கொண்டுவர உதவும். புத்துணர்ச்சியுடன் மீண்டும் உங்களை பணியை செய்யத் தொங்குவீர்கள்.
2. கர்ப்பிணிகளுக்கு : கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இதேபோல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும் அடிக்கடி குமட்டல் ஏற்படும். அவர்கள் இதற்காக மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதனால், நீங்கள் சோர்வாகவோ அல்லது குமட்டல் ஏற்படும் சமயத்தில் இஞ்சி டீயை குடிக்கலாம். இது எவ்வித பக்க விளைவுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தாது.
4. இதய ஆரோக்கியம் : இஞ்சி டீயை நாள்தோறும் அருந்துவதால் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இது ரத்த அழுத்தத்தை (Blood pleasure) குறைந்து, ரத்த ஓட்டத்தை சீராக்குவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக்கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது. நெஞ்செரிச்சலை நீக்கி, கொழுப்பைக் குறைப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளலாம். இதய ஆரோக்கியமாக இருக்க வேண்டும் நினைப்பவர்கள் காஃபி அருந்துபவராக இருந்தால், அதனை தவிர்த்து இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளலாம்.
5. எய்ட்ஸ் அறிகுறிகளுக்கு தீர்வு : எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உணர்ச்சி இழப்பு ஏற்படும், சரியான நேரத்தில் பசி எடுக்காமல் எடை குறைவார்கள் ( Weight loss). அவர்கள், இஞ்சி டீயை சூடாக எடுத்துக்கொண்டால் அவர்களின் உடம்பில் உணர்ச்சி அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம் 2012ம் ஆண்டு நடத்திய ஆய்வில் உணர்ச்சி இழப்பு ஏற்பட்டவர்கள் இஞ்சி டீயை குடித்தபிறகு, அவர்களின் உணர்ச்சி அதிகரித்ததை கண்டுபிடித்தனர். மேலும், பசியை தூண்டுவதுடன் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கவும் இஞ்சி டீ பயன்படுகிறது.
6. இரத்த சர்க்கரை அளவு கட்டுபாடு : ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் High sugar, low sugar பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனை கட்டுப்படுத்த நாள்தோறும் சூடான இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளலாம். மேலும் படிநிலை இரண்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு எச்.பி.ஏ 1 சி அளவைக் குறைக்கிறது. மேலும், அழற்சி நோய்களை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கீல்வாதம் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களின் வலியை குறைக்கிறது. தலைவலி, மாதவிடாய் சிக்கல், தொண்டைப் புண் ஆகியவற்றின் வலிகளையும் இஞ்சி டீ குறைக்கிறது.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி நீரின் நீராவியை உள்ளிழுத்தால் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும், சளி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இஞ்சி டீ பயன்படுகிறது.
8. புற்றுநோயைத் தடுக்கும் : மனித உயிர்களுக்கு மிக்கப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது புற்றுநோய். ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது கவலையளிக்கக்கூடியதாகும். இந்நிலையில், கணையம் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க இஞ்சி டீ பயன்படுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதில் இஞ்சி முக்கிய பங்காற்றுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின்கள் தாதுக்களின் செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
9. நினைவாற்றலை பெருக்கும் : மன அழுத்தத்தால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இஞ்சி டீயை அருந்துவதால் மன அழுத்தம் நீங்கி மூளையின் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும். மேலும், ஆக்சிஜனேற்ற மன அழுத்தம் வயதான செயல்முறைகளை துரித்தப்படுத்தும். அல்சைமர் (Alzheimer) நோய்க்கும் வழிவகுக்கும். இஞ்சியில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் மூளையில் ஏற்படும் அழற்சியை தடுத்து, நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.