சில வகையான விஷத்தை உட்கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் ஆக்டிவேட்டட் சார்க்கோலை பயன்படுத்துகின்றனர். இது செரிமான மண்டலத்தில் பிணைக்கப்பட்டு, விஷமானது குடலால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது மற்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கிறது. மரம் போன்ற கார்பன் நிறைந்த பொருட்களை எரிப்பதன் மூலம் கரி உருவாகிறது, இது ஒரு நுண்ணிய, கறுப்புப் பொருளை உற்பத்தி செய்வதற்காக உற்பத்தியாளர்களால் அதிக நுண்துளைகளை உருவாக்குகிறது. எனவே, இது மற்ற பொருட்களுடன் எளிதில் பிணைக்க முடியும். இதுதான் கரியை செயல்படுத்துகிறது. எனவே, இதை பயன்படுத்தி உடலை தூய்மைப்படுத்துவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் பற்றி இனி பார்க்கலாம்.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் : சிறுநீரத்தில் உள்ள நச்சுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதற்கு சார்கோல் டிடாக்ஸ் முறை உதவுகிறது. இது நச்சுத்தன்மை செயல்முறைக்கு முக்கியமானது. உங்களுக்கு ஒருவேளை சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து பேச மறக்காதீர்கள்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் : ஆக்டிவேட்டட் சார்கோல் என்பது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இதை பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க முடியும். மேலும் இது, இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இந்த ஆக்டிவேட்டட் சார்க்கோலை வேக வைத்து சாப்பிடும் உணவுகளிலோ அல்லது ஸ்மூத்திஸ்களிளோ சேர்த்து கொள்ளலாம்.
சரும பாதுகாப்பு : உடலில் இருந்து நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் திறன் இந்த ஆக்டிவேட்டட் சார்க்கோலுக்கு உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும். இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவும். மேலும், இது காயங்கள் மற்றும் தொற்றுநோய்களை குணப்படுத்துவதோடு, முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படும்.
பிற பயன்பாடுகள் : ஆக்டிவேட்டட் சார்கோல் பல்வேறு பிபிரச்சனைகளுக்கும் பயன்படும். குறிப்பாக வாயு குறைப்பு, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு உதவுகிறது. இதை பற்றிய கூடுதல் ஆய்வுகளை மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தற்போது நடத்தி வருகிறது. எனவே வரும் காலத்தில் ஏராளமான நன்மைகளை இதன் மூலம் நம்மால் பெற முடியும்.
பக்க விளைவுகள் : ஆக்டிவேட்டட் சார்க்கோலை பயன்படுத்துவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பாதகமான எதிர்விளைவுகள் சில இதில் உள்ளன. இது வாந்தி போன்ற சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், நீங்கள் குடல் இயக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இதை எடுத்து கொள்வது குறித்து மருத்துவர்களிடம் அவசியம் ஆலோசிக்க வேண்டும். இல்லையேல் தீவிர பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.