தேன் ஒரு ஆன்ட்டி-பயாடிக்:
தேன் அதன் இயற்கை ரசாயனத் தன்மையினாலும் பிசுபிசுப்புத் தன்மையினாலும் இது ஒரு பெரிய ஆன்ட்டி-பயாடிக்காக செயல்படுகிறது. அதே போல் ஈரத்தன்மையினால் காயம் தானாகவே ஆறிவிடும் தன்மையையும் தேன் ஏற்படுத்துகிறது. இதோடு வெளியிலிருந்து தொற்று ஏற்படுவதையும் தடுக்கும் ஒரு ஷீல்டாக பயன்படுகிறது. தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. நம்மை பயமுறுத்தும் பாக்டீரியாக்கள் இந்த அமிலத்தன்மையினால் உடலில் ஒட்டாது.
தேனில் குளூக்கோஸ்-ஆசிடேஸ் என்ற ஒரு என்சைம் உள்ளது. இது குளூக்கோஸை ஹைட்ரஜன் பெராக்சைடாக உடைத்துக் கரைக்கிறது. தேன் கெட்டுப்போகாமல் இருக்க தேனீக்களே இயற்கையாக இந்த நடைமுறையைச் செய்கின்றன. இதனால் பாக்டீரியாக்கள் உடலுக்குள் புகுவது கடினம், புகுந்தாலும் அங்கு நீடிப்பது கடினம் என்கிறது ஆய்வுகள். ஈ-கோலை, சல்மொனெல்லா, ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் ஸ்டெபெலோ கோக்கை போன்ற பாக்டீரியாக்களுக்கும் எதிராக தேன் செயல்படுகிறது.
குடல் புழுக்களைக் களையும் தேன்:
நம் குடலில் உணவு சரியில்லாமல் போனாலோ, அல்லது கெட்டுப்போன உணவை உட்கொள்வதாலோ, அல்லது இப்போதைய ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலோ ஏற்படுகிற வயிற்றுப்புழு, குடல் புழு போன்ற ஒட்டுண்ணிகளை தேன் அழிக்கிறது. தேனுடன் பப்பாளியும் சேர்ந்து சாப்பிட்டல் குடற்புழுக்களிலிருந்து விடுதலை பெறலாம் என்று ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ஃபுட் என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
காயங்களை ஆற்றும் தேன்:
ஒரு சிறிய தீக்காயம் ஏற்படுகிறது என்றால் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு கூறுவது என்னவெனில் காயத்தை உடனே ஜில் நீரில் நனைக்க வேண்டும். பிறகு அதில் வெண்ணெயை தடவக்கூடாது. அந்த இடத்தில் தேனைத் தடவினால் காயத்துக்கு அது ஒரு மேஜிக் குணமளிக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை அழற்சி எதிர்ப்புத் தன்மையினால் காயம் ஆறும். மிதமான தீவிர காயத்துக்கு தேனைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
உடற்பயிற்சியின் போது நம்மை புத்துணர்வுடன் வைக்க உதவும் தேன்:
நாம் உடல் பயிற்சி செய்யும் போது நம் உடலுக்கு கார்போஹைட்ரேட்கள் அதிகம் தேவைப்படுகிறது. தேனில் 80% கார்போஹைட்ரேட் உள்ளது. அதாவது குளூக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் அதிகம் உள்ளது. மற்ற இனிப்புகளை விட இதில் க்ளைசீமிக் குறியீடு குறைவு. நம் தசைகள் இயங்குவதற்கு கார்போஹைட்ரேட்கள் அதிகம் தேவைன் என்பதால் தேன் அந்தத் தேவையை பூர்த்தி செய்கிறது. தேன் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது என்பதும் ஆய்வின் தகவலாகும்.
தேன் எனும் இருமல் மருந்து:
தேன் இருமலுக்கு அருமருந்து என்பது சொல்லத் தேவையில்லை தொன்மையான இந்திய மருத்துவத்தில் தேனை இருமலுக்குக் கொடுக்கும் வழக்கம் உண்டு. மேல் மூச்சுப்பாதை சார்ந்த மூச்சுக்குழல் பிரச்சனைகளுக்கு தேன் பெரிய அளவில் பயன்படுவதாக 2020-ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தொண்டை சார்ந்த இன்பெக்ஷன் மற்றும் நோய்களுக்கும் தேன் சிறந்தது. மருந்துக்கடைகளில் நாமே வாங்கிக் குடிக்கும் இருமல் மருந்துகளை விட தேன் சிறந்தது என்கிறது 2010-ம்ஆண்டு மருத்துவ ஆய்வு ஒன்று.