வார இறுதி நாட்கள் அல்லது மாலை வேளையில் பார்ட்டிக்கு சென்று விட்டு, சில ஆல்கஹால் நிரம்பிய பானங்களை குடித்த பிறகு, மறுநாள் காலையில் உடலில் மற்றும் உளவியல் அறிகுறிகள், ஒரு ஹேங்கொவர் எனப்படுகிறது. வேகமான இதயத் துடிப்பு, பதட்டம், உடல் வலி, தலைசுற்றல், துர்நாற்றம், தலைவலி, சோம்பல், குமட்டல், போட்டோபோபியா, உரத்த ஒலிகளுக்கு உணர்திறன், எரிச்சல், சோர்வு, வயிற்று வலி, ஒழுங்கற்ற மோட்டார் திறன்கள் மற்றும் வாந்தி ஆகியவை ஹேங்கொவரின் பொதுவான அறிகுறிகளாகும்.
வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகள் உள்ளன. பெரும்பாலான ஹேங்ஓவர்கள் 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே கடந்துவிடும் என்றாலும், அது அனைத்து நபர்களுக்கும் பொருத்தமானது இல்லை. எனவே அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது உங்களை நன்றாக உணர உதவும். ஹேங்கொவர் அறிகுறிகளைக் குணப்படுத்த, வீட்டிலேயே கிடைக்க கூடிய இந்த பொருட்களை வைத்து என்ன செய்ய முடியும் என பார்க்கலாம்...
தண்ணீர்: ஹேங்கொவர் அறிகுறிகளை அகற்றுவதற்கான எளிமையான வழி நிறைய தண்ணீர் குடிப்பது ஆகும். அதிகப்படியான ஆல்கஹாலை உட்கொள்வது உடலில் நீரழிப்பு ஏற்பட காரணமாகிறது. நீரிழப்பு தலைவலி, சோர்வு, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளை கொடுக்கிறது. எனவே ஆல்கஹாலால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய, சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்து, உடலை ரீஹைட்ரேட் செய்ய வேண்டும். இது மேலும் உங்கள் வயிற்றில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் உதவும்.
தேன்: ஹேங்கொவர் அறிகுறிகளுக்கும் தேன் ஒரு நல்ல தீர்வாகும். தேனில் உள்ள பொட்டாசியம் அளவு அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. தேனில் பிரக்டோஸ் உள்ளது, சர்க்கரையின் ஒரு வடிவமான இது உடலில் அதிகப்படியான ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது, ஹேங்கொவர் அறிகுறிகளைக் குறைக்கிறது.