எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியம் என்பது நம் நல்வாழ்வை உறுதி செய்ய கூடிய ஒன்று. தொடர்ந்து செய்யப்படும் சில சிறிய விஷயங்கள் கூட சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், சில தினசரி பழக்கவழக்கங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் ரத்தத்தை வடிகட்டும் மற்றும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் திறனில் பாதிப்புகள் ஏற்படும். நம் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பொதுவான சில பழக்கங்கள் இங்கே...
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது:
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அடங்கி இருக்கும் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேக்கேஜ்டு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல சிறுநீரக நோய் இல்லாதவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அவர்களின் சிறுநீரகம் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
பெயின் கில்லர்ஸ் & பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ்:
நம்மில் பலர் உடல்வலி அல்லது தலைவலி என்றாலே உடனே வலி நிவாரணிகளை எடுத்து கொள்கிறோம். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அடிக்கடி எடுத்து கொள்ளும் பெயின் கில்லர் மாத்திரைகள் நம்முடைய சிறுநீரகங்களை வெகுவாக பாதிக்கும் மேலும் நீண்டகால சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் ஊட்டச்சத்து அல்லது பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
உப்பு அதிகமாக சேர்த்து கொள்வது:
உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது நம் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இப்பழக்கம் உடலில் அதிகப்படியான சோடியத்திற்கு வழிவகுக்கும். உடலில் குவியும் அதிக சோடியத்தை அகற்ற முடியாமல் சிறுநீரகங்கள் சிரமப்படும். இது சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
உடலில் போதுமான நீர்சத்து இல்லாமல் வைத்திருப்பது..
தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கம் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.