ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு நிறைய பேர் விரும்புகின்றனர். ஆனால் எடை குறைப்பு ஆரோக்கியமான முறையில் நடப்பதை உறுதி செய்வது அவசியம் மற்றும் உடலை எதிர்மறையாக பாதிக்காமல் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், ஒருவரின் உணவு, உடற்பயிற்சி மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் பொறுமையாக இருந்து அத்தியாவசிய வாழ்க்கை முறை மாற்றங்களை இணைத்துக்கொள்வது முக்கியம். மேலும், அவை செயல்முறைக்கு மட்டுமே உதவும். உடல் எடையை அரோக்கியமான முறையில் குறைப்பு தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்பவை என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
செய்யக் கூடாதவை: தேநீர் அல்லது காஃபியுடன் உங்கள் நாளை தொடங்க வேண்டாம். செய்ய வேண்டியது: நீங்கள் தூங்கி எழுந்த 30 நிமிடங்களுக்குள் சூடான ஒரு மூலிகை பானத்துடன் (பெருஞ்சீரக தேநீர் நல்லது) உங்கள் நாளை தொடங்கலாம். காரணம்: தேநீர் அல்லது காஃபில் உள்ள கெஃபைன், கார்டிசோல் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் வெளியீட்டைத் தூண்டுகிறது மற்றும் உடலை ஒரு ‘ஸ்ட்ரெஸ்’ மோடில் வைக்கிறது. நாம் எழுந்தவுடன், உடல் அமைப்புகளும் எழுந்து முழு திறனுடன் செயல்படத் தொடங்க நேரம் தேவை. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது.
செய்யக் கூடாதவை: உண்ணும்போது மொபைலில் பேச வேண்டாம் அல்லது பார்க்க வேண்டாம். செய்ய வேண்டியவை: சாப்பிடும்போது உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். டிவி அல்லது மொபைல் போன் போன்றவற்றால் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம்: உணவில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் திருப்திகரமான சமிக்ஞைகளுடன் அதிகம் தொடர்புகொள்ள முடியும். எப்போது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பதை நன்கு அறிவீர்கள், அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பைக் குறைப்பீர்கள்.
செய்யக் கூடாதவை: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம். செய்ய வேண்டியவை: உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை, இரண்டு நிமிடங்களாவது எழுந்து நிற்க வேண்டும் அல்லது ஸ்ட்டெட்சஸ் செய்ய வேண்டும். காரணம்: சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, பகலில் அதிக நேரம் சுறுசுறுப்பாக இருந்து வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, உங்களுக்கு ஏற்படும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
செய்யக் கூடாதவை: காலை உணவுக்கு தானியங்களை சாப்பிட வேண்டாம். செய்ய வேண்டியவை: இட்லி, அவல் அல்லது உப்புமா போன்ற பாரம்பரிய காலை உணவுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். காரணம்: ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை சுவையூட்டப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்துவிட்டு இயற்கையான உணவுகள் உட்கொள்ளவதை உறுதி செய்யுங்கள்.
செய்யக் கூடாதவை: படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் டிவி, மொபைல் போன் பார்க்க வேண்டாம். செய்ய வேண்டியவை: படுக்கைக்கு செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிவி உள்ளிட்ட அனைத்து கேஜெட்களையும் நிறுத்தி வையுங்கள். காரணம்: இந்த கேஜெட்களில் இருக்கும் ஒளித்திரைகள் மெலடோனின் எனப்படும் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் வெளியீட்டை தாமதப்படுத்துகின்றன. இது தூங்குவதற்கு அதிக நேரம் எடுப்பது மட்டுமல்லாமல், சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கின்றன.