என்றுமே இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? நம் அனைவருக்குமே அழகாக இருக்கணும், எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சில முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை நாம் பட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. பிறரின் அனுபவங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
குறைவான சோம்பல் நேரம் : நீண்ட நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் கம்ப்யூட்டர் போற்றவற்றின் முன்பு அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுத்து ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.