புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது என்றால், கர்ப்பவாய் புற்றுநோயை மட்டும் தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். HPV என்ற வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய எந்த புற்றுநோய்க்கு ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் கர்ப்பவாய் புற்று நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹெச்பிவி வாக்சின் என்ற தடுப்பூசியை அனைத்து பெண்களுக்கும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முக்கியமான அங்கமாக, இந்திய அரசாங்கம் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க உள்ளது.
கர்ப்பவாய் புற்று நோய் தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி சில வாரங்களுக்கு முன்பே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி தற்போது இந்திய அரசாங்கம் பள்ளிகளில் 9 முதல் 14 வயது இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியை வழங்க திட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களின் பற்றிய பட்டியலை தயாரிக்க கொடுக்குமாறு மாநில அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டில் ஹ்யூமன் பாப்பிலோ வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்ட பின்பு கர்ப்பவாய் புற்று நோயை முழுவதுமாக தடுப்பதற்கு 2023 ஆம் ஆண்டிலேயே அனைவருக்கும் வழங்கப்படும் என்ற அரசாங்கம் அறிவித்திருந்தது.
கர்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசிகள் உள்ளன. 9 முதல் 14 வயதிலான சிறுமிகளுக்கு, 2 டோஸ் தடுப்பூசிகளை 6 மாத இடைவெளியில் கொடுக்கலாம். பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன் HPV தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர், 15 முதல் 45 வயது வரையில் 3 டோஸ்கள் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா இந்த மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல இடங்களில் HPV தடுப்பூசி மையம் அமைக்கப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.