ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

Glaucoma தீவிரமாக இருந்தால் பார்வை இழப்பை தவிர்க்க முடியாது. எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சையளிப்பது அவசியம்.

 • 19

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு வயதாகி விட்டது என்பது உணர்ந்து தங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட கூர்ந்து கவனிக்கிறார்கள். வயது சார்ந்து நம் புலன்களின் செயல்திறன் குறைவதில் கண்களுக்கு முக்கிய இடம் உண்டு. முடி நரைத்தல், சரும சுருக்கங்கள் ஒருபக்கம் வயதாவதை வெளிப்படையாக உணர்த்தினாலும் புலன்கள் என்று பார்க்கும்போது வயதாகி விட்டதை உணர்த்தும் முக்கிய ஒன்றாக இருக்கிறது பார்வை திறன் குறைபாடு. கண் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியமாகிறது.

  MORE
  GALLERIES

 • 29

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  முற்றிலும் பார்வை இழப்பை ஏற்படுத்த கூடிய கண் நிலைமைகளை பற்றியும் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலைமைகளில் ஒன்றுதான் (Glaucoma) இதை தமிழில் கண் அழுத்த நோய் என்று குறிப்பிடுகிறார்கள். கண்களில் இருந்து மூளைக்கு இமேஜ்களை அனுப்பும் பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே இந்த கண் அழுத்த நோய். இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 39

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  அறிகுறிகள் : இந்த நோயின் ஆரம்ப கட்டங்களில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது வெளிப்படையான அறிகுறிகள் என்று எதுவும் வெளிப்படாது. கண் அழுத்த நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் பார்வை திறனில் மிக கடுமையான சேதம் ஏற்படும் வரை பார்வையில் எந்த மாற்றத்தையும் கவனிக்க மாட்டார்கள். இதன் பாதிப்பு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. ஏற்கனவே இந்த நிலைமை உள்ள குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், நீரிழிவு /உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் அழுத்த நிலைமை ஏற்படும் வாய்ப்பு பொதுவானது.

  MORE
  GALLERIES

 • 49

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  தவிர மன அழுத்தம், கடுமையான சூரிய ஒளி அல்லது டிஜிட்டல் ஸ்ட்ரெயின் போன்ற வழக்கமான செயல்பாடுகளாலும் பார்வை சிதைவு மற்றும் பார்வையில் தெளிவின்மை ஏற்படலாம். கண் வலி, கண்கள் அடிக்கடி சிவத்தல், தலைவலி, குமட்டல், விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டத்தைப் பார்ப்பது உள்ளிட்ட அறிகுறிகள் கண்புரை அல்லது கண் அழுத்த நோய் போன்ற தீவிர கண் கோளாறாக இருக்கலாம். அபாயங்களை தவிர்க்க வழக்கமான அடிப்படையில் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  ஆரோக்கியமான உணவுகள் : ஊட்டச்சத்துமிக்க சீரான உணவுகள் அடங்கிய டயட் ஆரோக்கியமான கண்களுக்கு அவசியமானது மற்றும் Glaucoma போன்ற தீவிர கண் நிலைமைகள் ஏற்படுவதை தடுக்கிறது. கிரான்பெர்ரிஸ், அகாய் பெர்ரி, பிளாக் டீ, கிரீன் டீ, ஆளி விதைகள், மாதுளை போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. ப்ரோக்கோலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும் டயட்டில் சேர்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  தினசரி ஒர்கவுட்ஸ் : வழக்கமான உடற்பயிற்சிகள் கிளாக்கோமா நோயாளிகளுக்கு உள்விழி அழுத்தத்தை குறைக்கலாம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை விறுவிறுப்பான நடைப்பயிற்சி உள்ளிட்ட மிதமான ஒர்க்கவுட்ஸ் கண் நோய்களுக்கான அபாயத்தை குறைக்கிறது. கிளாக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் ஹெட்ஸ்டான்ட்ஸ், லெக்ஸ் அப் வால், ஸ்டாண்டிங் ஃபார்வர்டு பென்டஸ் உள்ளிட்ட சில குறிப்பிட்ட யோகாசனங்களைத் தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 79

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  நிபுணரை அணுக வேண்டும் : Glaucoma தீவிரமாக இருந்தால் பார்வை இழப்பை தவிர்க்க முடியாது. எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சையளிப்பது அவசியம். குறிப்பிட்ட சில மாத இடைவெளியில் வழக்கமான கண் பரிசோதனைகளை செய்துகொள்வது அபாயங்களை தவிர்க்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 89

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  ஆரோக்கியமான BMI : உடல் நிறை குறியீட்டெண் (BMI) அதிகமாக் இருந்தாலும், மிக குறைவாக இருந்தாலும் அது சில நேரங்களில் கண் அழுத்த நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 99

  கண்ணழுத்த நோய் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்துமாம்..! - பாதுகாப்பாக இருக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  வாழ்க்கை முறை மாற்றங்கள் : வாழ்க்கை முறை காரணிகள் கண் அழுத்தத்தை பாதிக்கும் என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே மது மற்றும் புகைப்பழக்கம் இருப்பின் முற்றிலும் கைவிட முயற்சி எடுக்கலாம். மெடிட்டேஷன் செய்வது, பல் சுகாதாரத்தை பராமரிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம். பல பார்வை சிக்கல்கள் ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்றவையாக இருப்பதால், கவனிக்காமல் விட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சரியான நேரத்தில் நோயறிதலை செய்ய அவ்வப்போது செய்யப்படும் விரிவான கண் பரிசோதனைகள் அவசியமாகிறது.

  MORE
  GALLERIES