பார்ட்டிக்குப் பின்னர் ஹேங்கோவரிலிருந்து உங்களை மீட்க உதவும் சில ஹெல்தி உணவுகள்..!
ஹேங்கோவரானது பலருக்கும் குமட்டல், சோர்வு, போன்ற உடல் இயக்கங்களை பாதிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, தசை வலிகள் ஏற்படக்கூடும்.
Web Desk | January 5, 2021, 11:19 AM IST
1/ 8
நேற்றிரவு பார்ட்டியில் பலமான விருந்தா, மறுநாள் காலை தலைவலியுடன் எழுந்தீர்களா? பொதுவாக மது அருந்திய பின்னர் பலருக்கும் தலைவலி உண்டாகும். அதிகப்படியான மது அருந்திய பிறகு பலருக்கும் தொண்டை தாகமாக இருக்கும், மயக்கம் ஏற்படும். ஹேங்கோவரானது பலருக்கும் குமட்டல், சோர்வு, போன்ற உடல் இயக்கங்களை பாதிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, தசை வலிகள் ஏற்படக்கூடும். இருப்பினும், ஹேங்கோவர்களை எதிர்த்துப் போராட பின்வரும் உணவுகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஹேங்கோவரிலிருந்து விடுபட சில அற்புதமான உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
2/ 8
அஸ்பாரகஸ், தேன், நட்ஸ்கள் :அஸ்பாரகஸில் உள்ள சில சேர்மங்கள் நொதிகளின் சுரப்பிற்கு உதவுகின்றன, அவை ஆல்கஹாலின் வீரியத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலை தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கின்றன. எனவே, ஹேங்கோவர் அல்லது அதற்கு முன் அஸ்பாரகஸை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்ட, பிரக்டோஸ் தேன் (antioxidants, fructose honey) வயிற்றில் இருக்கும் மீதமுள்ள ஆல்கஹாலை அகற்ற உதவுகிறது. அதேபோல், நட்ஸ்களில் பொட்டாசியம், மெக்னீசியம் (Potassium, magnesium) நிறைந்திருப்பதால் ஹேங்கோவர்களை சமாளிக்க இவை சிறந்தவை. இவற்றுடன் பாதாம், அக்ரூட் பருப்புகள் (Almonds, walnuts) எடுத்துக் கொள்ளலாம்.
3/ 8
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் :உடலில் நீரிழப்புக்குப் பிறகு, உங்கள் உடல் நன்றாக இயங்க வாழைப்பழம் போன்ற சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உடலுக்கு வழங்குவது முக்கியம். வாழைப்பழத்தில் பொட்டாசியம், சோடியம் உள்ளது, இது ஆல்கஹால் உட்கொள்வதால் (alcohol consumption) உங்கள் உடல் இழந்த நீர் சத்துக்களை உதவுகிறது. உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்கவும், தசை இயக்கங்களை எளிதாக்கவும் பொட்டாசியம் தேவைப்படுகிறது.
4/ 8
ஓட்ஸுடன் வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் (carbohydrates) இருப்பதால் அவை உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உடல் சோர்வைத் தணிக்கும். ஓட்ஸில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது.
5/ 8
தேங்காய் தண்ணீர் : எலக்ட்ரோலைட்டின் (electrolyte) மற்றொரு சிறந்த ஆதாரமான தேங்காய் தண்ணீர் ஹேங்கொவரிலிருந்து விரைவில் மீட்கிறது. 1 கிளாஸ் தேங்காய் தண்ணீர் (240 மில்லி) சோடியம், பொட்டாசியம் (sodium, potassium) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாஸ்பேடாஸ், டையஸ்டேஸ், மற்றும் இதர என்சைம்கள் போலிக் அமிலம் போன்றவை இந்த நீரில் இருக்கின்றது.
6/ 8
ஆகையால் உணவு செரிமாணத்திற்கு இது உகந்தது. தேங்காய் தண்ணீரில் சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் அதிக அளவில் இருக்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து மட்டுமல்ல ஹேங்கொவரில் இருந்து உங்களை வெளியே கொண்டு வர இந்த தேங்காய் தண்ணீர் (Coconut water) போதுமானது.
7/ 8
முட்டை மற்றும் அவோகேடோ :வைட்டமின் B12 உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ளும். அதற்கு முட்டை ஒரு சிறந்த ஆதாரமாகும். ஆக்ஸிஜனேற்ற குளுதாதயோனை வெளியிட அமினோ அமிலம், சிஸ்டைனை உட்கொள்ளும்போது இது நல்ல முறையில் உடலுக்கு பலத்தை அளிக்கிறது. ஆல்கஹால் குளுதாதயோனைக் குறைக்கும் அதே வேளையில், முட்டைகள் அதை அதிகரிக்கும் மற்றும் ஹேங்கோவர்களுக்கு சிகிச்சையளிக்க இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நீர் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் கல்லீரல் பாதிப்புக்கு எதிராக அதைக் காப்பாற்றுவதற்கும் அவோகேடோ (Avocado) பழம் சிறந்தது.
8/ 8
கீரை : வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, ஃபோலேட்போன்றவை கீரையில் அதிகம் இருப்பதால் இது ஹேங்கோவருக்கு சிகிச்சையளிக்கும் ஒரு சிறந்த உணவாகும். மனித உடலில் வாயு, பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த விதமான நோய்களும் அண்டாது என்கிறது சித்தமருத்துவம். இந்த மூன்றையும் சமநிலையில் வைக்கும் அளவுக்கு சத்துக்களைக் கொண்டிருக்கிறது கீரை வகைகள். கூடவே ஒவ்வொரு விதமான கீரையிலும் தனித்துவமான சத்துக்களும் இணைந்திருக்கின்றன. அணைத்து விதமான கீரைகள் ஹேங்கொவருக்கு நல்ல பலனை அளிக்கும்.