உடல் பருமன் பிரச்சனையை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் டயட் விஷயங்களும், ஒர்க்அவுட் வீடியோக்களும் சமூகவளைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. சிலர் டயட் மூலம் உடல் எடையை குறைப்பார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் குறைப்பார்கள், இன்னும் சிலர் இரண்டையும் பின்பற்றுவார்கள். அந்த வகையில் நீங்கள் டயட் மூலம் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கிறீர்கள் எனில் ஃபுரூட்ஸ் டயட் சிறப்பாக இருக்கும். அதிலும் நீங்கள் இந்த பழங்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன பார்க்கலாம்.
வாழைப்பழம் : பழங்களில் வாழைப்பழம் இன்றியமையாதது. இதில் புரோட்டீன் சத்து நிறைவாக உள்ளது. அதோடு மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் நிறைவாக உள்ளது. இது உங்களின் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இன்சுலின் அளவையும் மேம்படுத்துகிறது. எனவே தினமும் ஷேக் , ஓட்ஸ் அல்லது சாலட் என ஏதேனும் ஒரு வகையில் வாழைப்பழத்தை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்பிள் : ஃபுரூட் டயட்டில் கட்டாயம் ஆப்பிள் இருக்க வேண்டும். ஆப்பிள் இல்லாமல் அந்த டயட் நிறைவுறாது. ஏனெனில் ஆப்பிள்தான் உங்களுக்கு போதுமான நார்ச்சத்தை அளிக்கிறது. அதோடு உங்கள் உடல் எடையை சீரான அளவில் குறைக்கவும் உதவுகிறது. டயட் நேரத்தில் பசி உணர்வு ஏற்பட்டாலும் ஒரு ஆப்பிள் சாப்பிட பசி அடங்கும். அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது. உங்களுக்கு காஃபி தரும் எனர்ஜியை ஒரு ஆப்பிள் பெறலாம். எனவே கஃபைன் விரும்பிகளுக்கான சிறந்த மாற்று ஆப்பிள்.
பெர்ரீஸ் : பெர்ரி பழங்கள் சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் நிறைவாக கொண்டுள்ளன. எனவே ராஸ்பெர்ரி, புளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன் டி ஆக்ஸிடன் டுகள் நிறைவாக உள்ளன. அதோடு விட்டமின் கே, நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைவாக உள்ளது. எனவே உங்கள் சாலடை வண்ணமயமாகவும், சுவையானதாகவும் மாற்ற இந்த பழங்கள் உங்களுக்கு உதவும். குறிப்பாக உங்கள் இலக்கான உடல் எடையை குறைக்கவும் உதவும்.