புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நமது உடல் எடையை குறைக்க உதவும். பொதுவாகவே குறைவான கலோரிகளைக் கொண்ட நார்ச்சத்து உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். உங்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இது உதவிகரமாக இருக்கும். உணவுக் கட்டுப்பாடு என்பது குறுகிய கால பலன்களை தந்தாலும், அதை தொடர்ந்து கடைப்பிடிப்பது என்பது சற்று சவாலான காரியம் தான். சீரான உணவுப் பழக்க வழக்கம் மூலமாக உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
பரங்கிக்காய் : ஒரு கப் அளவிலான பரங்கிக்காயில் 80 கலோரிகள், விட்டமின்கள், மினரல்கள், பீடா கரோடின் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. பீடா கரோடீன் என்ற சத்து நிறைந்துள்ளதன் காரணமாகவே இது ஆரஞ்சு கலரில் காட்சியளிக்கிறது. கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் ஃபேட் போன்றவை முற்றிலும் இல்லாத பரன்கிக்காய் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.