இருப்பினும் மற்ற மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் சில நோய்களை சமாளிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்படி நாம் இன்றவும் போராடி வரும் பாதிப்புகளில் இந்த ஆண்டு இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. அப்படி இந்தியாவில் 2022 ஆண்டு மக்களை அதிகமாக பாதித்த அபாயகரமான நோய்களின் பட்டியலை பார்க்கலாம்.
கோவிட்-19 : 2020 ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா நோய் பல உயிர்களை காவு வாங்கியது. இது உடலளவில் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்று வரை மக்களை விடவில்லை. அப்படி 2019 ஆண்டு தொடங்கிய இந்த நோயால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி இந்தியாவிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததில் கொரோனாவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
இதய நோய் : இந்தியாவில் இதய நோய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று இளைஞர்களையும் பாதிக்கும் அளவிற்கு அச்சுறுத்தும் நோயாக உள்ளது. இது அதிகமாக போதை பழக்கம், உடல் உழைப்பின்மை, மோசமான உணவுப்பழக்கம், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு , உடல் பருமன் , குடும்ப நோய் போன்ற தீவிரமான நோய் பாதிப்பு ஆகியவை இதய நோய்க்கான முக்கிய காரணிகளாகும்.