நம் நாட்டில் காணப்படும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். இது பெரும்பாலும் சைலன்ட் கில்லர் நோய் என்று அழைக்கப்படுகிறது. தமனி சுவர்களுக்கு எதிராக ரத்தத்தின் நீண்ட கால விசை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் நிலையை குறிப்பதே உயர் ரத்த அழுத்தம் ஆகும். ஒரு நபருக்கு ரத்த அழுத்தம் ஹை லெவல் செல்லும் போது அந்த நபருக்கு கார்டியாக் அரெஸ்ட் அல்லது பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் மிக அதிகம். வேகமான வாழ்க்கை முறை மற்றும் பிஸியான வேலை ஷெட்யூல்கள் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணிசமான அளவு மன அழுத்தத்தில் உள்ளனர்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும் : உடலுறவு கொள்ளாதவர்களைக் காட்டிலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவோர் விந்தணுக்களை வெளியேற்றுவதால் மனதளவிலும் , உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாக 2006 ஆண்டு மருத்துவ இதழில் வெளியேன பயோலாஜிக்கல் சைக்காலஜி ஆய்வு கூறுகிறது. இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தமும் குறைவாக இருக்குமாம். அதேசமயம் உடலுறவுகொள்ளாத ஆண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வாக இருப்பதையும் விந்தணு வெளியேற்றாததே காரணம் என சுட்டிக்காட்டுகிறது.
2. வாழைப்பழம்: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய கனியான வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. பொட்டாசியம் இரத்த நாள சுவர்களில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
3. பீட்ரூட்: பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து நிறைந்துள்ளது. இது மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் கூட பீட்ரூட் சாறு உட்கொண்ட 6 மணி நேரத்திற்கு பிறகு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் BP கணிசமாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.