முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

தினசரி வீட்டில் சேமித்து சாப்பிடப்படும் சில உணவுகள் கூட அலர்ஜியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! நாம் அன்றாடம் சாப்பிடுவதில் அலர்ஜியை ஏற்படுத்த கூடிய சில உணவுகளின் பட்டியல்

 • 17

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  நாம் உயிர் வாழ உணவுகள் மிக முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில உணவுகள் திடீரென அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. உணவு அலர்ஜி என்பது வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பட கூடிய மிகவும் பொதுவான ஒன்று.

  MORE
  GALLERIES

 • 27

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  உலகம் முழுவதும் சராசரியாக 6% பெரியவர்கள் மற்றும் 8% குழந்தைகள் இந்த அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் வெளியே சாப்பிடும் உணவுகள் தான் அலர்ஜியை ஏற்படுத்தும் என்று நாம் நினைப்போம். தினசரி வீட்டில் சேமித்து சாப்பிடப்படும் சில உணவுகள் கூட அலர்ஜியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! நாம் அன்றாடம் சாப்பிடுவதில் அலர்ஜியை ஏற்படுத்த கூடிய சில உணவுகளின் பட்டியல்:

  MORE
  GALLERIES

 • 37

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  மாட்டு பால்: பசும்பால் குடிப்பதால் ஏற்படும் அலர்ஜி பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு. சில நேரங்களில் பெரியவர்களுக்கும் கூட பால் நுகர்வால் அலர்ஜி உண்டாகிறது. பசும்பால் அல்லது சீஸ், பட்டர் போன்ற பால் சார்ந்த உணவுகளை எடுக்கும் போது ஏற்படும் அலர்ஜியால் சிலருக்கு வீக்கம், தடிப்புகள், வாந்தி சில சந்தர்ப்பங்களில் அனாபிலாக்ஸிஸ் உள்ளிட்ட அறிகுறிகளை சந்திக்க நேரிடலாம். அதே போல பாலால் ஏற்படும் அலர்ஜி என்பது பொதுவாக பாலை குடித்த 5 முதல் 30 நிமிடங்களுக்குள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலால் ஏற்படும் அலர்ஜி செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  முட்டை: பலரால் தினசரி சாப்பிடப்படும் முட்டைகளாலும் உணவு அலர்ஜி ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு அலர்ஜியில் இரண்டாவது பொதுவான காரணமாக இது இருக்கிறது. முட்டை நுகர்வால் ஏற்படும் அலர்ஜியின் அறிகுறிகள் ஆபத்தானவையாக இருக்கும் மற்றும் அரிதானது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் அலர்ஜி இருக்கலாம். ஏனெனில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவில் உள்ள புரதங்கள் சற்று வேறுபடுகிறது. இருப்பினும் அலர்ஜியை தூண்டும் பெரும்பாலான புரதங்கள் முட்டையின் வெள்ளைக்கருவில் காணப்படுவதும் அலர்ஜிக்கு காரணமாகிறது. முட்டையால் ஏற்படும் அலர்ஜியின் அறிகுறிகளில் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாச பிரச்சனைகள் அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  கோதுமை: கோதுமையில் காணப்படும் புரதம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. மற்ற அலர்ஜியை போலவே, கோதுமை நுகர்வால் ஏற்படும் அலர்ஜியும் செரிமானக் கோளாறு, வாந்தி, தடிப்புகள், வீக்கம் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் அனாபிலாக்ஸிஸ் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை மற்றும் புரோட்டின் க்ளூட்டன் கொண்ட பிற தானியங்களைத் தவிர்ப்பது நலம்

  MORE
  GALLERIES

 • 67

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  சோயா: சோயா மற்றும் சோயா அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகளில் இந்த அலர்ஜி பொதுவானது. சோயாபீன்ஸ், சோயா மில்க், டோஃபு கொண்ட பொருட்களில் உள்ள புரதத்தால் அலர்ஜி தூண்டப்படுகிறது. இந்த அலர்ஜிக்கான அறிகுறிகளில் அரிப்பு, சென்சிட்டிவ் உணர்வு மற்றும் மூக்கு ஒழுகுதல், ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் வரை இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  அன்றாடம் சாப்பிடும் இந்த உணவுகளில் உஷாராக இருங்கள்.... அலர்ஜியை உண்டாக்கலாம்..!

  வேர்க்கடலை: வேர்க்கடலை நுகர்வால் ஏற்படும் அலர்ஜியும் மிகவும் பொதுவானது. சிலநேரங்களில் கடுமையான மற்றும் ஆபத்தான எதிர்வினைகளை ஏற்படுத்த கூடும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் இந்த அலர்ஜி பொதுவானது. இந்தஅலர்ஜி அறிகுறிகளில் தோல் வெடிப்பு, தோல் சிவத்தல், அரிப்பு, குமட்டல், வாந்தி, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு உள்ளிட்டவை அடக்கம். பீனட் பட்டர் எடுத்து கொள்வது சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும். இதற்கு ஒரே தீர்வு, வாழ்நாள் முழுவதும் வேர்க்கடலையை தவிர்ப்பது.

  MORE
  GALLERIES