முகப்பு » புகைப்பட செய்தி » இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

இதய ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளும் வாழ்வியல் பழக்க வழக்கங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், நம் வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே கடினமானதாக மாறிவிட்டது.

  • 18

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    நம் உடலில் உயிர் இயங்குவதற்கான ராஜ உறுப்புகளில் ஒன்றுதான் இதயம். நம் முடி, முகம், சருமம் போன்ற வெளிப்புற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நாம் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், உயிரை இயங்க வைக்கும் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து மறந்து விடுகிறோம். இதயம் மட்டுமல்ல சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை நாம் கண்டு கொள்வதில்லை.

    MORE
    GALLERIES

  • 28

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    பிற உறுப்புகளை விட்டு தள்ளுங்கள், அவை சில நிமிடங்கள் செயலிழந்து போனால், நாம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதயத்தை நினைத்துப் பாருங்கள். ஒன்றிரண்டு நிமிடமெல்லாம் வேண்டியதில்லை. ஒரு சில விநாடிகள் இதயம் துடிக்காமல் இருந்தாலே நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.ஆக, இதய ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளும் வாழ்வியல் பழக்க வழக்கங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், நம் வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே கடினமானதாக மாறிவிட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    குறிப்பாக துரித உணவுகளை சாப்பிடுவதும், வேலைக்குச் செல்லும் இடத்தில் கிடைத்த உணவுகளை சாப்பிடுவதும் வாடிக்கையாக மாறிவிட்டது. இத்தகைய சூழலில் நம் இதய ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சில உணவுகளை நாம் அவ்வபோது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 48

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    பெர்ரி பழங்கள்அனைத்து வகை பெர்ரி பழங்களும் நம் இதய நலனுக்கு நல்லது தான். அது ஸ்ட்ராபெர்ரி என்றாலும் சரி, பிளாக்பெர்ரி என்றாலும் சரி அவற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உண்டு. நாம் விரும்பி உண்ணும் கோடைகால சீசன் பழமான நாவல் பழங்களும் செர்ரி வகையை சேர்ந்ததுதான். இதய நோய்களை செர்ரி பழங்கள் தடுக்கக் கூடியது.

    MORE
    GALLERIES

  • 58

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    கீரைகள் : பச்சைக் கீரைகள் அல்லது கீரையுடன் கூடிய காய்கறிகள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். எந்த அளவுக்கு மிகுதியாக கீரைகள் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இதய நலனுக்கு நல்லது. இறைச்சியை போல் விலை உயர்ந்தவை அல்ல கீரைகள். ஆக, தினசரி வாங்கி சாப்பிடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 68

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    மீன்: பொதுவாக இதய நோயாளிகளை கேட்டுப் பாருங்கள். அசைவம் சாப்பிடுவது என்றால் மீன் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறுவார்கள். ஆம், உண்மைதான். மத்தி, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற பல மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது நம் ரத்த கொழுப்பை கரைக்க கூடியது.

    MORE
    GALLERIES

  • 78

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    சாக்கலேட் : சர்க்கரை நோயாளிகளுக்கு சாக்கலேட் எதிரிதான் என்பதை மறுக்க இயலாது. ஆனால், அடர்ந்த நிறம் கொண்ட சாக்கலேட்டுகளில் இதய நோய்களை தடுப்பதற்கான பண்புகள் உள்ளன. அதற்காக சாக்கலேட் நல்லது என்று எண்ணி மிகுதியாக சாப்பிட்டுவிட வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 88

    இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

    தக்காளி : தினசரி நம் உணவில் தவறாது இடம்பெறும் உணவுப் பொருள் தான். இது நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை மேம்படுத்தக் கூடியது. நல்ல கொழுப்பு அதிகரித்தால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

    MORE
    GALLERIES