

உங்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் HbA1C அளவை நிர்வகிப்பது அவசியம். பண்டிகை காலங்களில், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். விடுமுறை நாட்களில் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை (Meal Plan) பராமரிப்பது கடினம். BeatO ஆய்வின்படி, பண்டிகைகள் பெரும்பாலான மக்களின் இரத்த-குளுக்கோஸ் அளவை மோசமாக பாதிக்கின்றன, குறிப்பாக தீபாவளியின் போது 250 mg/dL (milligrams per decilitre) அளவை கொண்டவர்கள் கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரித்துள்ளனர்.


அதே நேரத்தில் 300 mg/dக்கு மேல் இரத்த-குளுக்கோஸ் அளவைக் கொண்டவர்கள் 18 சதவீதம் அதிகரித்துள்ளனர். பொதுவாக, இந்த போக்கு தீபாவளிக்கு பின் மூன்று நாட்கள் வரை தொடரும், கடந்த மூன்று ஆண்டு பண்டிகை காலத்தின் தரவுகளின் அடிப்படையில், துர்கா பூஜையில் தொடங்கி தீபாவளி வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சுவாரஸ்யமாக, உலக நீரிழிவு தினத்துடன் இந்த ஆண்டு தீபாவளியும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.


பொதுவாக இந்திய திருவிழாக்கள் வண்ணங்கள், கொண்டாட்டம், உணவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுடன் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன, மேலும் இதன் நேர்மறையான தாக்கத்தை நம்மால் அளவிட முடியாது. ஒரு நபருக்கு நாள்பட்ட சுகாதார நிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், திடீரென்று ஒரு நாள் கூத்தைப்போல் அவரின் நலத்தை பறிக்க பண்டிகைகள் காரணமாகிவிடக் கூடாது.


பண்டிகைகள் என்றால் உண்ணாவிரதம், விருந்து அல்லது சில சந்தர்ப்பங்களில் இரண்டையும் அவை உள்ளடக்கியிருக்கும். இதுபோன்ற நேரங்களில் நீரிழிவு நோயாளிகள் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொள்ளவேண்டும். பண்டிகைக்கு முந்தைய சர்க்கரை கட்டுப்பாட்டை உறுதிசெய்வது, உங்களுக்கு உண்ணாவிரதம் தேவையா, இல்லையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள், சர்க்கரை இனிப்புகள் மற்றும் பிற கார்போஹைட்ரேட் நிறைந்த தின்பண்டங்கள் தவிர்க்கப்படுவதா அல்லது அவற்றை குறைவாக உண்பதா என்பதை தீர்க்கமாக முடிவெடுக்கவேண்டும். இதுபோன்ற நேரங்களில் உடற்பயிற்சி மிகவும் அத்தியாவசியம்.


உங்கள் வீட்டில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை பண்டிகை காலத்திற்கு முன்பே இன்சுலின் மருந்துகளோ மாத்திரைகளையோ வைத்திருக்க வேண்டும். ஹைப்போகிளைசீமியா (குறைந்த சர்க்கரை அளவு) அல்லது ஹைப்பர் கிளைசீமியா (உயர் சர்க்கரை அளவு) காரணமாக அதிக ஆபத்து உள்ளது மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளுக்காக பண்டிகை காலத்திற்கு முன்னர் உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் ஒரு ஆலோசனையுடன் கூடிய மதிப்பாய்வு பெறுவது கட்டாயமாகும்.


முன்கூட்டியே திட்டமிடுங்கள் : நீங்கள் எந்தவொரு நிகழ்விற்கும் வருவதற்கு முன்பு, நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்பதற்கான திட்டத்தை வைத்திருங்கள். எடுத்துக்காட்டாக, தின்பண்டங்கள் மட்டுமே இருக்கும் என்று உங்களுக்குத் தெரிந்தால், கலோரிகளில் குறைவானவற்றைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடுங்கள், காய்கறிகள் மற்றும் குறைவான புரதங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. மறைக்கப்பட்ட கலோரிகள், உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கக்கூடிய சாஸ்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உணவை நேரத்திற்கு முன்பே திட்டமிட ஆன்லைன் உணவக மெனுக்களைப் பார்ப்பதன் மூலமும் நீங்கள் திட்டமிடலாம்.


தண்ணீர் குடியுங்கள் : நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் நீரேற்றம் மற்றும் குடிநீர் முக்கியம், ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி இது நாம் உட்கொள்ளும் கலோரிகளுக்கும் உதவக்கூடும் என்பதைக் காட்டுகிறது. தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி, அதிக தண்ணீர் குடிப்பது குறைவான கலோரிகளை சாப்பிடுவதோடு, குறைந்த சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பையும் இணைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது மற்ற சர்க்கரை இனிப்பு பானங்களைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.


உணவைத் தவிர்க்க வேண்டாம் : உணவைத் தவிர்ப்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை எதிர்மறையாக பாதிக்கும். விடுமுறையில் நீங்கள் பின்பற்றும் அட்டவணை உங்களுக்கு பிஸியாக இருந்தால், அப்போது நீரிழிவு மருத்துவரை அணுகி ஆலோசனையை பெற்றுக்கொள்வது முக்கியம். மேலும் உங்களின் சிகிச்சை மருந்துகளை உங்களுடனே வைத்திருங்கள். Abbott தயாரித்த, நீரிழிவு சிகிச்சையில் கார்போஹைட்ரேட்டுகளின் கலவைகள் உள்ளன, அவை மெதுவாக ஜீரணிக்கப்பட்டு உறிஞ்சப்பட்டு இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.


பழைய நிலைக்கு திரும்புங்கள் : சில நேரங்களில் அதிக அளவு ஆசை தீர உணவை உண்ணாதீர்கள். முடிந்த அளவு சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இது குறித்து குற்ற உணர்வுடன் இருப்பதற்கு பதிலாக, உங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்து அடுத்த உணவில் மீண்டும் சரியான பாதையில் நடைபோட தொடங்குங்கள் . மேலே உள்ள உதவிக்குறிப்புகள் மூலம், பண்டிகை நாட்களை நல்ல முறையில் ஆரோக்கியத்துடன் கொண்டாடி, ஒரு சிறந்த உணவு திட்டத்தை உருவாக்கி,. மகிழ்ச்சியாக இருங்கள்