வளர்சிதை மாற்றம் என்பது உணவை ஆற்றலாக மாற்றும் ஒரு செயல்முறையாகும். உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் மெதுவாக இருந்தால், அது எடை அதிகரிப்பதற்கும், எப்போதும் சோர்வாக உணர்வதற்கும் வழிவகுக்கும். உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க விரும்பினால் என்ன செய்வது என்பது பற்றிய பல விஷயக்கள் உள்ளன. ஆனால் நாங்கள் இப்போது வளர் சிதை மாற்றம் மோசமாக நீங்கள் செய்யும் 5 தவறுகள் எப்படி காரணமாகிறது என்பது பற்றி விரிவரிக்க உள்ளோம்.
கலோரி பற்றாக்குறை: உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் உணவு மூலம் கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கை குறைக்கிறோம். நீங்கள் உண்ணும் உணவை திடீரென்று குறைத்தால், உங்கள் உடல் அதை உணர்ந்து, மெதுவான விகிதத்தில் கலோரிகளை எரிக்க ஆரம்பிக்கிறது. நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டியது அவசியமானது. ஆனால் அதனை வளர் சிதை மாற்றத்தை சிதைக்கும் விதத்தில் இல்லாமல் படிப்படியாக செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி இல்லாமை: நீங்கள் ஆக்டிவாக இருந்தால் தான் உடலும் ஆக்டிவாக இருக்கும். சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களது உடல் மிகவும் மெதுவாகவே செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட உடல் செயல்பாடு வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைப்பதால் உங்கள் உடல் மிகவும் சோர்வாக காணப்படுகிறது. உடலையும், வளர் சிதை மாற்றத்தையும் சுறுசுறுப்பாக வைக்க ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி அல்லது ஜிம்மிற்குச் செல்வது என ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.
தூக்கமின்மை: மனிதனின் உடலுக்கு ஓய்வு மிகவும் முக்கியமானது. எனவே தான் 8 மணி நேர உறக்கம் இன்றியாமையாதது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முழுமையான தூக்கமின்மையும் உடலில் வளர்சிதை மாற்றம் குறைவதற்கான முக்கிய காரணங்களாக அமைகிறது. போதுமான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள், அப்போது தான் உங்கள் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க தயாராக இருக்கும்.