ஒரு நாளை சிறப்பாக தொடங்க வேண்டும் என்றால் காலை உணவினை தவிர்க்காமல் சாப்பிட வேண்டியது மிக அவசியம். அதிலும், ஒருவர் காலை உணவுக்கு என்ன சாப்பிடுகிறார் என்பதை பொறுத்து, ஒரு நாள் முழுவதும் அவர் தேர்வு செய்யும் உணவு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவு உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதேபோல உடல் எடையை குறைக்க விரும்புவோர் பின்பற்றவேண்டிய எடை இழப்புக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஆரோக்கியமான உணவும் மற்றும் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேபோல, ஒருவர் தனது வயிற்றுக்கொழுப்பை அதாவது தொப்பையை குறைக்க விரும்பினால் அவர் எடுத்துக்கொள்ளும் காலை உணவு வழக்கத்திலும் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களைச் சேர்ப்பது மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பது தொப்பையை குறைக்க உதவும். மெலிந்த உடற்பகுதியுடன் ஆரோக்கியமான மற்றும் தொப்பை இல்லாத பிட்டான உடலை அடைய உதவும் சில காலை உணவு விருப்பங்கள் பற்றி பின்வருமாறு காணலாம்.
தயிர் : தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், தயிரை அடிக்கடி உட்கொள்பவர்கள் அதிக எடையை இழந்து, மெலிந்த தசை வெகுஜனத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உணவில் சரியான அளவு கால்சியம் தசைகளை பாதிக்காது. உடல் தசைகளை பராமரிக்க உதவுகிறது. இது கலோரிகளை குறைப்பதோடு வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. தயிரில் புரதம் நிறைந்துள்ளது. இது உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய உணவு ஆகும்.
உப்மா : உப்மா நார்ச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமான எடை இழப்பு உணவு விருப்பத்திற்கான முதல் விருப்பமாக உள்ளது. மேலும் இதில் இயற்கையாகவே குறைந்த கொழுப்புள்ள ரவை உள்ளது. நல்ல கொழுப்பு உள்ளதால் நல்ல கொலஸ்ட்ராலுக்கு உதவுகிறது. கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், உப்மாவை சமைக்கும் போது அதிக எண்ணெயை சேர்க்க கூடாது.
முட்டைகள் : அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் அல்லது நல்ல கொழுப்புகள் கொண்ட முட்டைகள் காலை உணவுக்கு சரியான தேர்வாகும். இதனை வேகவைத்தோ, காய்கறிகள் நிறைந்த ஆம்லெட் வடிவிலோ செய்து சாப்பிடலாம். ஏனெனில் இது குறைந்த கொழுப்பு மற்றும் காலை உணவை நிறைவானதாக மாற்றும். காலை உணவு விருப்பம் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், கலோரிகள் முறையாகக் பெறப்படவேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
கஞ்சி : குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கார்போஹைட்ரேட்டுகளை காலையில் சாப்பிடலாம். அந்த வகையில் ஓட்ஸை ஆரோக்கியமான காலை உணவாக பாலுடன் சேர்த்துக் கொள்ளலாம். தவிர, ஒரு இரவு முழுவதும் குளிரவைக்கப்பட்ட தயிர் அல்லது குளிர்ந்த பாலுடன் ஓட்ஸ் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் கஞ்சியில் நீங்கள் விரும்பும் பழங்களைச் சேர்க்கலாம். அதேபோல சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.
பாசி பயிறு சில்லா : பாசி பருப்பு அடிப்படையில் பிரிக்கப்பட்ட கொண்டைக்கடலை ஆகும். இது நார்ச்சத்து மிக்க வளமான மூலமாகும். செரிமான நார்ச்சத்துகளுடன், இது சரியான அளவு புரதத்தையும் கொண்டுள்ளது. இது எடை இழப்புக்கு உதவும் ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது. நீங்கள் இந்த பருப்பை காய்கறிகள் சேர்த்து சமைக்கலாம். இதனால் உணவு ஆரோக்கியமானதாகவும், அதிக சத்தானதாகவும், நிறைவாகவும் மாறும்.