இந்தியாவில் உள்ள மக்களில் சுமார் 9% முதல் 32% வரை பேர் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிக உடல் எடை மற்றும் நீரிழிவு உள்ளவர்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதலாவது எளிய கொழுப்பு கல்லீரல் நோய். அதாவது கல்லீரலில் கொழுப்பு உள்ளது. ஆனால் கல்லீரல் செல்களுக்கு வீக்கமோ அல்லது சேதமோ இல்லை. இரண்டாவது, ஆல்கஹால் அல்லாத ஸ்டீடோஹெபடைடிஸ்.
இதில் கல்லீரல் செல்களில் வீக்கம் அல்லது சேதம் ஏற்படலாம். இது ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் இரத்த சர்க்கரை அளவு, அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் இவை ஏற்படலாம்.
“ஒவ்வொரு மாதமும் சுமார் 30 நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களை பார்க்கிறேன். நம் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் கல்லீரல் பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் " என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பாவ்சார். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான குறிப்புகளை தருகிறார் டாக்டர் பாவ்சார்.
சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் : சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதும், அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பதும் இந்த நோய்க்கு முக்கிய காரணங்கள் ஆகும். நீங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும், காலை நேர உணவை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.