திருமணத்திற்கு பின்பு ஒவ்வொரு பெண்ணும் மகப்பேறு அடைய விரும்புவார்கள். ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது அவளுக்கு மட்டும் சதோஷத்தை கொடுக்க போவதில்லை. அவளின் கணவர், தாய், தந்தை, மாமனார், மாமியார் என ஒட்டுமொத்த குடும்பத்திற்கே சந்தோசம் பெருகும். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் கருவுறுதலில் பெண்கள் சில பிரச்சனைகள் அல்லது தாமதத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பெண் மட்டுமல்ல ஒரு ஆணின் சுகாதார நிலையும் கேள்விக்குறியில் இருக்கிறது.
ஒரு பெண் கருத்தரிக்க முயற்சிக்கும் விஷயத்தில், உடலுறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரின் ஆரோக்கியமான உணவு மற்றும் பிஎம்ஐ ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி ஒரு குழந்தையை பெற்றெடுக்க உடளவில் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதன்படி, ஒரு பெண் கருத்தரிப்பதை பாதிக்கும் சில காரணிகள் மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பின்வருமாறு காண்போம்.