முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

நாட்டின் பல இடங்களில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் வெப்ப அலை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சீசனில் நிலவும் அதீத வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கண் ஆரோக்கியம் கூட பாதிக்கப்படலாம்.

 • 19

  MORE
  GALLERIES

 • 29

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  குறிப்பாக உச்சி வெயில் நேரத்தில் அல்லது வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் நேரடியாக சூரிய ஒளி கண்களில் படும் போது, பல கண் பிரச்சனைகள் ஏற்படலாம். உலகளவில் சுமார் 2.2 பில்லியன் நபர்களுக்கு கிட்ட அல்லது தூர பார்வை குறைபாடு காணப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது, வெயிலில் செல்லும் போது சூரிய ஒளி கண்களை தாக்காமல் பார்த்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

  MORE
  GALLERIES

 • 39

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  கோடையில் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் கவனம் செலுத்துவதுமுக்கியம். ஐ ட்ராப்ஸ்களை பயன்படுத்துவது முதல் யுவி ப்ரொட்டக்டட் சன்கிளாஸ்களை அணிவது வரை பல வழிகளை பின்பற்ற அறிவுறுத்துகிறார் மருத்துவர் ரிஷி ராஜ் போரா. கோடையில் உங்கள் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும் சில பயனுள்ள டிப்ஸ்கள் இங்கே..

  MORE
  GALLERIES

 • 49

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  கண்கள் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்... கோடையில் வெளுத்து வாங்கும் வெயிலுக்கு கண்கள் வறண்டு போவது என்பது பொதுவானது. எனவே கண்களை ஹைட்ரேட்டாக வைப்பது அவசியம். சம்மர் சீசனில் அதிக வெப்பத்துடன் வீசும் பலத்த காற்று கண்களில் கடும் நீரிழப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும், இதனால் கண்கள் வறண்டு போகிறது. எனவே கண்களில் Protective tears-ஐ உற்பத்தி செய்ய நம் உடலுக்கு போதுமான அளவு திரவம் அவசியம். தண்ணீரை அதிகம் குடிப்பது உடலை மற்றும் கண்களை ஹைட்ரேட்டாக வைக்க உதவும் அதே நேரம் ஆல்கஹால் மற்றும் காஃபின் கோடைகாலத்தில் உடலில் பாதக விளைவை ஏற்படுத்தும், எனவே குறைவாக எடுப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 59

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  சரியான Shades-ஐ பயன்படுத்த வேண்டும்: மருத்துவர் ரிஷி ராஜ் போரா கூறுகையில், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சு (UVR) Photokeratitis அல்லது Photo Conjunctivitis உள்ளிட்ட நிலைகளை ஏற்படுத்தும். இந்த நிலை ஸ்னோ பிளைன்ட்னஸ் (Snow Blindness) என்றும் அழைக்கப்படுகிறது. UVR, குறிப்பாக ஷார்ட்டர் வேவ்லென்த் கொண்ட UVB கதிர்களுக்கு கண்களை தொடர்ந்து வெளிப்படுத்துவது கண்புரை வளர்ச்சி, பெட்ரிஜியம் (Pterygium) போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே வெயிலில் வெளியே செல்லும் போது கண்களின் பாதுகாப்பிற்கு சரியான ஷேட்ஸ்(Shades) பயன்படுத்துவது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 69

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  நீந்தும் போது கண்களை பாதுகாக்கவும்: பெரும்பாலும் நீச்சல் குளங்களில் (Swimming Pool) காணப்படும் க்ளோரின், உள்ளே நீச்சலடிப்போரின் கண்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும். Swimming Pool நீரில் க்ளோரின் பயன்படுத்தப்படுகிறது என்பதால் கண் வீக்கம், எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாக்க நீச்சல் கண்ணாடிகளான ஸ்விம்மிங் கூகுள்ஸை (swimming goggles) பயன்படுத்த அறிவுறுத்தபடுகிறது.

  MORE
  GALLERIES

 • 79

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  ஐ ட்ராப்ஸ்: சருமம் மட்டுமின்றி நம் கண்களுக்கும் போதுமான ஈரப்பதம் எப்போதும் தேவை. நாம் அதிகம் எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் ப்ளூ ரேஸ்களில் இருந்து கண்களை பாதுகாக்க மற்றும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஐ ட்ராப்ஸ் அவசியமாகிவிட்டது. அதிகமான மாசு மற்றும் தீவிர வெப்பம் உள்ளிட்டவை காரணமாக கோடையில் நீரிழப்பு பொதுவானது. இந்த தீவிர டிஹைட்ரேஷன் உடலில் கண்ணீரை உற்பத்தி செய்வதை கடினமாக்குகிறது. இதனால் கண்கள் உலர்வது மற்றும் பிற பார்வை பிரச்சனைகள் ஏற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட ஐ ட்ராப்ஸ் பயன்படுத்துவதோடு தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 89

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  கண்களை தேய்க்காதீர்கள்... கண் ஆரோக்கியத்திற்கு நம்முடைய கை சுகாதாரத்தை சரியாக பராமரிப்பது அவசியம் என்கிறார் டாக்டர் போரா. பலரிடம் பொதுவாக காணப்படும் பழக்கம் கைகளால் கண்களைத் தேய்ப்பது. ஆனால் இது கண் தொற்றை ஏற்படுத்தும். கைகளை அசுத்தம் தேங்காமல் அடிக்கடி கழுவு தூய்மையாக வைப்பது பெரும்பாலான கண் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும். குறிப்பாக LASIK போன்ற கண் அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை அல்லது கிளௌகோமா ஷன்ட் அறுவை சிகிச்சை போன்ற சந்தர்ப்பங்களில், கண்கள் எளிதில் தொற்றால் பாதிக்கப்படும். எனவே கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்வதோடு, கண்களை கைகளால் தேய்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 99

  கோடை காலத்தில் உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? டிப்ஸ் உங்களுக்காக...

  நல்ல தூக்கம்.. நம் கண்கள் நாள் முழுவதும் பல பணிகளை செய்கின்றன, இதனால் மிகவும் சோர்வடைகின்றன. எனவே கண்களுக்கு போதுமான ஓய்வு தேவை. இதற்கு சரியான நேரத்தில் தூங்க செல்வது மற்றும் தினசரி 7 - 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றும் அதே நேரம் சீரான இடைவெளியில் கண்களை பரிசோதித்து கொள்ள மறக்காதீர்கள்.

  MORE
  GALLERIES