முகப்பு » புகைப்பட செய்தி » கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

High cholesterol : விழித்திரை தமனி அடைப்பு, பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்ணில் உள்ள நரம்பு செல்கள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கும். அதிகபட்சமாக பார்வை இழப்பை ஏற்படுத்தும் அல்லது பார்வையை மோசமாக்கும்.

  • 18

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    உங்கள் உடல் சரியாக செயல்பட கொலஸ்ட்ரால் எனப்படும் வகை கொழுப்பும் அவசியம். இருப்பினும், உங்கள் இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். அதிக கொலஸ்ட்ரால் என்பது இதய நோய் முதல் பக்கவாதம் வரையிலான கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அப்படி கொழுப்பு அதிகரிப்பின் அறிகுறிகளை உணராமல் இருப்பதால் அதன் ஆபத்து இன்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதாவது உங்கள் கொழுப்பின் அளவைக் கண்டறியாமல் விடுவது இதய ஆரோக்கியத்தை ஆபத்தில் கொண்டு செல்கிறது. அப்படி உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிப்பின் ஒரு எச்சரிக்கை அறிகுறிதான் கண் பார்வையில் மிதவை உணர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    மிதவை என்பது உங்கள் பார்வையில் உள்ள புள்ளிகள் மற்றும் கண்களை நகர்த்தும்போது நகரும் சிலந்தி வலைகள் போல இருக்கும். உங்கள் பார்வையில் உள்ள கரும்புள்ளிகள் அல்லது கோடுகள் (மிதவைகள்) விழித்திரை நரம்பு அடைப்பின் அறிகுறியாகும். விழித்திரை, உங்கள் கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளி-உணர்திறன் திசு, விழித்திரை தமனி மற்றும் விழித்திரை நரம்பு வழியாக அதன் இரத்த ஓட்டத்தை பெறுகிறது. அந்த நரம்பு தடுக்கப்படும்போது, ​​அது விழித்திரை நரம்பு அடைப்பு என்று அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    நரம்பு தடுக்கப்பட்டால், இரத்தமும் திரவமும் விழித்திரைக்குள் வெளியேறும். இது நிகழும்போது, விழித்திரையின் மேக்குலா என்ற பகுதி வீக்கமடையக்கூடும். வீக்கம் உங்கள் மையப் பார்வையை பாதிக்கிறது. விழித்திரை நரம்பு அடைப்பு உள்ளவர்களுக்கு அதிக கொழுப்பு எனப்து பொதுவான அறிகுறி. 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கண் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு உள்ளவர்களில் அதிக கொழுப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. விழித்திரை நரம்பு அடைப்பின் மற்ற அறிகுறிகளில் ஒரு கண்ணில் பார்வை மாற்றம், ஒரு கண்ணில் மங்கலான பார்வை மற்றும் பாதிக்கப்பட்ட கண்ணில் வலி ஆகியவை இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 48

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    அறிகுறிகள் என்ன ? : நீங்கள் கண் மிதவைகளை அனுபவிக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், மிதவைகளை அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளும் உள்ளன. மிதவைகள் என்பவை, சிறிய கோடுகள், கொக்கிகள், சிலந்தி வலை வடிவங்கள் அல்லது பிற ஒழுங்கற்ற வடிவங்கள் என வெவ்வேறு வடிவங்களை கொண்டிருக்கும். அவை நூல் போன்ற இழைகளைப் போலத் தோன்றலாம். அவை ஏறக்குறைய பார்க்கக்கூடியதாக இருக்கும். அவை இருண்ட புள்ளிகள் அல்லது உங்கள் கண்களை நகர்த்தும்போது நகரும் புள்ளிகள் வடிவத்திலும் இருக்கலாம். நீங்கள் இந்த மிதவைகளை தெளிவாக காண முயற்சிக்கும் போது, அவை காட்சி பார்வையிலிருந்து விரைவாக நகர்ந்துவிடும். கண் மிதவைகள் பெரும்பாலும் திரைகள், நீல வானம் அல்லது வெள்ளை சுவர் போன்ற பிரகாசமான பின்னணியில்தான் தெளிவாக தெரியும். இந்த மிதவைகளின் தீவிரம், அளவு மற்றும் வடிவம் நபருக்கு நபர் மாறுபடும்.

    MORE
    GALLERIES

  • 58

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    விழித்திரை தமனி அடைப்பு, பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்ணில் உள்ள நரம்பு செல்கள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கும். அதிகபட்சமாக பார்வை இழப்பை ஏற்படுத்தும் அல்லது பார்வையை மோசமாக்கும். விழித்திரை நரம்பு அடைப்புக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் பார்வையை மீண்டும் பெறலாம். ஆனால் பார்வையின் தரம் ஒரே மாதிரியாக இருக்காது. மீண்டும் உருவாகும் அடைப்பைத் தடுக்க, உங்கள் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உங்கள் வாழ்க்கை முறை, உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை இந்த சுகாதார நிலைமைகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 68

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும் ? : வழக்கத்தை விட அதிகமான கண் மிதவைகள், கண்ணில் வெளிச்சம் அல்லது உங்கள் பார்வையின் எந்தப் பக்கத்திலும் இருள் போன்றவற்றை நீங்கள் கவனித்தால், நீங்கள் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். கண் மிதவைகளை கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ராலும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்களுக்கு அதிக கொழுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய இதுவும் ஒரு அறிகுறியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. கொழுப்பை உறுதி செய்ய மருத்துவர்கள் இரத்த பரிசோதனைச் செய்து உறுதிபடுத்துவார்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    தடுப்பதற்கான வழிகள் என்ன  ? : அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் ஏற்படக்கூடும் என்பதால், உங்கள் உணவை ஆரோக்கியமான உணவுக்கு மாற்றுவது அவசியம். ஓட்ஸ், ஆப்பிள், முந்திரி மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 88

    கண் பார்வையில் ஏதோ மிதப்பது போல் தோன்றியுள்ளதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறி..!

    தினமும் உடற்பயிற்சி செய்வது அதிக அளவு கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. புகைபிடித்தல் மற்றும் குடிப்பதைத் தவிர்த்து, மன அழுத்தமில்லாத மனப்பான்மையைக் கொண்டிருக்க முயற்சிக்கவும். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும்.

    MORE
    GALLERIES