ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

பல அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், இரண்டு, மூன்று லேயர்கள் இருக்கும் மாஸ்க்குகளை தேர்தெடுத்து, உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதி செய்து அணிய வேண்டும். 

 • 110

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  கொரோனா வைரஸக் கட்டுப்படுத்த தெரியாமல் உலகம் நாடுகள் திணறி வருகின்றன. வரும் முன் காப்பது மட்டுமே மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக அணியும் மாஸ்க், முழுவதுமாக கொரோனாவை தடுக்கும் ஆற்றல் இல்லை என்றாலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கட்டுப்படுத்துபவையாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 210

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், டபுள் மாஸ்கிங் கொரோனா பரவலில் இருந்து பெருமளவு காப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு மிக குறைந்த அளவு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 310

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  டபுள் மாஸ்கிங் பலன் கொடுக்கிறதா : டபுள் மாஸ்கிங் தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பான CDC இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. ஒரு மாஸ்க் மீது மற்றொரு மாஸ்க் அணிந்திருக்கும்போது, தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளது. மேலும், கொரோனா தொற்றும் விகிதமும் மிக குறைவான அளவு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ள சி.டி.சி, 85 முதல் 95 விழுக்காடு டபுள் மாஸ்கிங் தொற்றில் இருத்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 410

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  கொரோனாவில் இருந்து டபுள் மாஸ்கிங் பாதுகாப்பது எப்படி : மருத்துவ ரீதியில் கூறினால், கூடுதலான மாஸ்க் அணியும்போது கிருமிகள் தொற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தி, நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து பெருமளவு தடுக்கிறது. கூடுதலான மாஸ்க் அணிந்திருக்கும்போது பரவும் தொற்றின் வீரியமும் குறைவான அளவில் மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கூட்டம் நெரிசல் மிக்க இடங்கள், தொற்று அபாயம் அதிகம் இருக்கக் கூடிய பகுதிகளில் இது நல்ல பலனைக் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 510

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  பொதுபோக்குவரத்து, காற்றோட்டம் குறைவாக இருக்கும் பகுதி, சந்தை பகுதிகள், மருதுதவமனை போன்ற பகுதிகளில் கூடுதலான டபுள் மாஸ்கிங் அவசியமாகும். டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும் அதேநேரத்தில் அடிப்படை வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மிகவும் கடினமாக அணிந்து கொள்ளாமல் மூச்சுவிடுவதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் அணியும்போது டபுள் மாஸ்கிங், வைரஸ் தொற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 610

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  டபுள் மாஸ்க் எப்படி அணிய வேண்டும் : வீட்டில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளான மாஸ்க்குகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருத்துவ மாஸ்க் ஒன்றை அணிந்து, அதற்கு மேல் துணியினால் ஆன மாஸ்க்கை அணிவது சிறந்தது எனக் கூறுகின்றனர். இரண்டு மாஸ்க்குளை அணியும்போது முறையாக வாய் மற்றும் மூக்கு பகுதிகள் முழுவதுமாக மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 710

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  ஒன்றை மேலும், மற்றொன்றை கீழுமாக தளர்த்தியும், ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்ளலாம். மாஸ்க் அணிவது மட்டுமே முழுவதுமான பாதுகாப்பை வழங்கிவிடாது. ஏற்கனவே கூறியதுபோல் முறையாக அணிய வேண்டும். இரண்டு மாஸ்க்குகளும் தரமானதாக இருக்க வேண்டும். இரண்டு தனித்தனி மாஸ்க்குகள் 56.6 விழுக்காடு மட்டுமே பாதுகாப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள சி.டி.சி, இரண்டு மாஸ்க்குகள் ஒன்றாக தைக்கப்பட்டிருப்பவை 85.4 விழுக்காடு பாதுகாப்பை கொடுப்பதாக கூறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  மாஸ்க்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும் : பல அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், இரண்டு, மூன்று லேயர்கள் இருக்கும் மாஸ்க்குகளை தேர்தெடுத்து, உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதி செய்து அணிய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 910

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  வெளிப்புறத்தில் துணி மாஸ்க்கும், உட்புறத்தில் சர்ஜிக்கல் மாஸ்க்கும் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள மாஸ்க்குகளை வாங்குவது நல்லது. நீங்கள் அணியும் டபுள் மாஸ்க் உங்களுக்கு எந்தவகையிலும் தொந்தரவு அல்லது அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. குறிப்பாக, சுவாசிப்பதற்கு தடையாக இருக்கும் மாஸ்க்குகளை தேர்தெடுக்க வேண்டாம்.

  MORE
  GALLERIES

 • 1010

  Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

  தவிர்க்க வேண்டியது என்ன : டபுள் லேயர் மாஸ்க்குகள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், இரண்டு மாஸ்க்குகளும் ஒரே துணியினால் உருவாக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது. சர்ஜிக்கல் மாஸ்க்கு பாதுகாப்பு தருபவையாக இருந்தாலும், ஒரு லேயர் மட்டுமே அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அழுக்காக இருக்கும் மாஸ்க்குகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை உபயோக்கிக்க கூடாது.

  MORE
  GALLERIES