ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

இது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பூஞ்சை தொற்றுநோய்களில் ஒன்றாகும், இது சுமார் 3% முதல் 4% மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 • 19

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  பெரும்பாலானோர் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கால்களும் அழகாக இருப்பது அவசியம். கால் விரல் நகங்களில் பூஞ்சை உருவாவது Onychomycosis என அறியப்படுகிறது. இது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பூஞ்சை தொற்றுநோய்களில் ஒன்றாகும், இது சுமார் 3% முதல் 4% மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டால் நகங்களின் அடிப்பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். நாட்கள் செல்ல செல்ல நகங்கள் முழுமையாக அழுகிவிடும். எனவே விரல் நகங்களில் தொற்றுகள் ஏற்பட்டால், அதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் நீங்கள் எல்லா வகையான சிகிச்சையை பெற்றாலும் கால் விரல் நகத்தில் உள்ள பூஞ்சை எளிதில் போவதில்லை.

  MORE
  GALLERIES

 • 39

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  கால் நகங்கள் பூஞ்சையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து தோல் மருத்துவர் தீபாலி பரத்வாஜ் விளக்கியுள்ளார். அதில் நகங்களில் பூஞ்சை தோன்றுவதற்கான காரணம் மற்றும் அதை தடுக்கக்கூடிய வழிகள், குணப்படுத்துதல் குறித்து இங்கு காண்போம்.,

  MORE
  GALLERIES

 • 49

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  கால்கள் அழகாக இருக்க நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இருப்பினும், டாக்டர் தீபாலி கருத்துப்படி, “உங்களுக்கு நெயில் பாலிஷ் பிடிக்கும் என்றால், அதை போட்டு பத்து நாட்களுக்குள் அகற்றவும்” என தெரிவிக்கிறார். அதேபோல பூஞ்சை வந்ததற்கான அறிகுறிகள் தோன்றினால் அதன் மீது நெயில் பாலிஷ் போடுவதை தவிர்த்து விடுமாறு அறிவுறுத்துகிறார்.

  MORE
  GALLERIES

 • 59

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  மேலும் தினமும் இரவு கால்களை மிதமான சூடு தண்ணீரில் கழுவி விட்டு, எலுமிச்சை துண்டுகளை எடுத்து உங்கள் கால் நகங்களை தேய்த்து கழுவ வேண்டும். பின்னர் ஆலிவ் எண்ணெய் கொண்டு உங்கள் நகங்கள் மற்றும் கால்களை நன்கு மசாஜ் செய்து விட்டு தூங்கலாம். மறுநாள் காலையில் கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 69

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு : நீரிழிவு நோய் உள்ள பெண்கள் எப்போதுமே தங்கள் நகங்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என டாக்டர் தீபாலி கூறுகிறார். ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு பூஞ்சை வேகமாக பரவுகிறது, குறிப்பாக மழைக்காலத்தில் நகங்களில் உள்ள பூஞ்சைகள் அதிகமாக பரவுகிறது. இதேபோல நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த கருவிகள் அழுக்காக இருந்தாலும் பூஞ்சை ஏற்பட இது ஒரு காரணமாக இருக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 79

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  குறிப்பாக அழகு நிலையங்களில் கால்களை அழகுபடுத்தி கொள்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அழகு நிலையங்களுக்கு சென்றால் உங்களுக்கு முன்னால் கருவிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.

  MORE
  GALLERIES

 • 89

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  ஈரப்பதத்தை தவிர்க்கவும் : நகங்களில் பூஞ்சைகள் ஏற்படாமல் இருக்க முதல் வழி, அதிக நேரம் ஈரப்பதத்திற்கு ஆளாகாமல் இருப்பதே என கூறப்படுகிறது. எனவே எப்போதும் ஈரத்தில் இருப்பதை விரும்புபவர்கள் அதனை தவிர்க்குமாறு மருத்துவர் எச்சரித்தார். முடிந்தவரை உங்கள் கால்களை உலர்ந்த நிலையிலேயே வைத்திருங்கள். இருப்பினும், நிறைய பெண்கள் ஈரமான சூழலில் வேலை செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் நீர் உட்புகாத பிளாஸ்டிக்கை அணிந்து கொண்டு வேலை செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 99

  கால் கட்டை விரல் நகத்தை சுற்றிலும் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளதா..? உங்களுக்கான எளிமையான வழிமுறைகள்..!

  மேலும் மழைக்காலங்களில் பூஞ்சை தொற்றால் அதிகமான நபர்கள் பாதிக்கப்படுகின்றனர், எனவே நீங்கள் மழைக்காலத்தில் பாதுகாக்க இருக்க வேண்டும். ஆரம்ப அறிகுறிகளாக உங்கள் நகங்களில் வித்தியாசம் தென்பட்டால், உடனடியாக, க்ளோட்ரிமாசோல் கொண்ட பூஞ்சை எதிர்ப்பு பவுடர்களை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் ஸ்டெராய்டுகளும் இல்லாத பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களை வாங்கி கால்விரல்களுக்கும் நகங்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளில் பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES