தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்தடுத்து இவர் நடித்து வரும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருவதால் தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற ராஷ்மிகா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ‘சாமி, சாமி’ பாடலுக்கு ராஷ்மிகா ஆடிய ஸ்டேப்பை முயற்சித்து பார்க்காத இளம் பெண்களே கிடையாது எனும் அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடனத்தில் பட்டையைக் கிளப்பும் ராஷ்மிகா மந்தனா, அதற்காக தனது உடலை எப்போதும் சிக்கென மெயிண்டன் செய்து வருகிறார். இயல்பாகவே ராஷ்மிகா மந்தனா எடை குறைவாக இருந்தாலும், அதனை பக்காவாக பராமரித்து வருகிறார். இதற்காக ராஷ்மிகா தினந்தோறும் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்கிறார் என உங்களுக்கு தெரியுமா?. அவர் ஹெல்த் சீக்ரெட்டுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. ஜிம்மில் உடற்பயிற்சி: ராஷ்மிகா மந்தனா தனது வழக்கமான வொர்க் அவுட்களை தினந்தோறும் ஜிம்மில் மேற்கொண்டு வருகிறார். தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை சீராகவும், ஆரோக்கியமாகவும் பராமரித்து வருகிறார். அவ்வப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
என்ன மாதிரியான உடற்பயிற்சிகள்? ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாகிராமில் பாலோசெய்தாலே போதும், அவர் தினந்தோறும் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். பார்பெல் டெட்லிஃப்டை என்ற எடை தூக்கும் பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த பயிற்சி உடலில் உள்ள முக்கிய தசைகளை வலுவாக்கவும், வலிமை கொடுக்கவும் உதவுகிறது.
2. ஸ்ட்ரைட் பார் மிலிட்டரி பிரஸ்: ராஷ்மிகா மந்தனா செய்யும் முக்கியமான உடற்பயிற்சியில் மற்றொன்று ஸ்ட்ரைட் பார் மிலிட்டரி பிரஸ், இதன் மூலம் அவருடைய தோள்பட்டை, ட்ரை செப்ஸ் எனப்படும் மேல் கையின் பின்புறம் உள்ள தசை, ட்ரேபீசியஸ் எனப்படும் தோள் பட்டைக்கு வெளிப்புறமாக உள்ள தசை, வயிற்றின் மையப்பகுதி ஆகியவற்றை வலுவாக்க உதவுகிறது.
3. ஒற்றை கையில் டம்பல் ஸ்னாட்ச்: இந்த வொர்க் அவுட் ராஷ்மிகாவிற்கு செம்ம எனர்ஜியை கொடுக்க கூடியது. இந்த உடற்பயிற்சியை செய்வதால் தோள்கள், கீழ் முதுகு, தொடை எலும்புகள், குளுட்டுகள் மற்றும் லேட்ஸ் உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களை வலுப்படுத்த உதவுகிறது. அத்துடன் வெயிட் லாஸுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது.
4. புஷ் அப் அண்ட் ஹோல்ட்: ராஷ்மிகா மந்தனா புஷ் அப் அண்ட் ஹோல்ட் பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் போட்டோஸ்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது காணலாம். புஷ் அப் செய்வது அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தாலும் புஷ் அப் ஹோல்ட் பயிற்சியை சிலரால் மட்டுமே செய்ய முடியும். அதில் ராஷ்மிகா மந்தனா சிறப்பாக தேறியுள்ளார். உடல் எடையை குறைக்கவும், வயிற்றில் சேரும் எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க மற்றும் டைட் ஆக்க உதவுவதால், நடிகையான ராஷ்மிகா மந்தனாவிற்கு தேவையான உடற்பயிற்சியாக உள்ளது.