புகையிலை பயன்பாடு, மது பழக்கம், உடல் பருமன், ஆரோக்கியமற்ற டயட், GERD நோய் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உணவுக்குழாயின் எந்த பகுதியிலும் கேன்சர் உருவாகலாம் மற்றும் பல அறிகுறிகளை கொண்டிருக்கலாம். இங்கே உணவுக்குழாய் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகளை பார்க்கலாம். பிரபல Oncosurgeon கன்சல்ட்டன்டான டாக்டர் திரத்ரம் கௌசிக் ஷேர் செய்துள்ள பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
உணவை சரியாக முழுங்க இயலாமை: இந்த கேன்சர் பாதிப்பால் உணவுக்குழாயின் லுமேன் சுருங்குவதால் உணவுகளை சரியாக முழுங்க முடியாமல் போகும் பிரச்சனை ஏற்படும். துவக்கத்தில் திட உணவுளை முழுங்குவதில் மட்டுமே சிரமம் ஏற்படும் என்றாலும் நோய் தீவிரமடையும் போது தண்ணீர் உள்ளிட்ட திரவங்களை முழுங்குவதிலும் கூட சிரமம் ஏற்பட கூடும்.