உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசைதான். ஆனால், நம் உடல் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் நம் முயற்சிகளுக்கு தடையாக அமையக் கூடும். உதாரணத்திற்கு சர்க்கரை நோய் மற்றும் ஹைபோதைராய்டிஸம் போன்ற நோய்கள் வரக் கூடிய விளிம்புநிலை அபாயத்தில் இருப்பவர்களுக்கு உடல் எடை குறைப்பு முயற்சி பலன் அளிக்காமல் போகலாம்.
சீரான உணவு : நார்ச்சத்து, புரதசத்து நிறைந்த சீரான உணவுகளை சாப்பிடும் பட்சத்தில் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்கும். நார்ச்சத்து உணவுகளை சாப்பிடும்போது, நம் உடல் சர்க்கரை சத்தை உறிஞ்சுகின்ற வேகம் மட்டுப்படுத்தப்படும். புரதம் நிறைந்த உணவுகளானது ஆரோக்கியமான மெடபாலிச நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.
தினசரி உடற்பயிற்சி : உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சிகள் இன்றியமையாதவை என்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். அதனுடன் சர்க்கரை நோய் அபாயம் மற்றும் ஹைபோதைராய்டிஸம் ஆபத்துகள் ஆகியவையும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை இது அதிகரிக்கிறது. வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்களுக்கு குறையாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மருத்துவ ஆலோசனை : உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ஹைபோதைராய்டிஸம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதுகுறித்து அவ்வபோது மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்து கொள்ளவும். உடல் எடை குறைப்பு முயற்சிகளுக்கு தடையாக இருக்கக் கூடிய இந்தப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை மூலமாக தீர்வு காண்பது அவசியமாகும்.