முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

நீங்கள் உடல் எடையையை குறைக்க விரும்பினால், தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுங்க.

  • 110

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    தற்போதைய காலத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே பெரிய பிரச்சனை எப்படி உடல் எடையை குறைப்பயது என்பது தான். உடல் எடையினை குறைக்க பல வலிகள் இருந்தாலும் மக்கள் விரும்புவது என்னவோ, “எந்த வேலையும் செய்யாமல் எப்படி உடல் எடையை குறைக்கலாம்” என்பதை தான். உங்கள் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க முழு நெல்லிக்காய் எவ்வாறு உதவுகிறது என தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 210

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : பெரிய நெல்லிக்காய் சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு பகுக்கிறது. நெல்லிக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்ற அமிலங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 310

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் எவ்வாறு உதவுகிறது? : தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகள் கரையும். அதாவது, இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதுடன், மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் அதிக அளவு நார்சத்து இருப்பதால், இது பசியை கட்டுப்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 410

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    பெரிய நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் : நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. அதே போல, வயிற்றுப் புண்களையும் குணமாக்கும். இதய ஆரோக்கியத்துக்கு முக்கியப்பங்கு வகுக்கிறது. உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தின் போது செல்லில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

    MORE
    GALLERIES

  • 510

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    தொப்பை அல்லது உடல் பருமனை கரைப்பதற்கு நெல்லிக்காய் சிறந்த உணவாக இருப்பதன் காரணம், இதில் உள்ள சத்துக்கள். வைட்டமின் சி உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் உபாதைகளை எதிர்த்து போராடுகிறது. கல்லீரல் மற்றும் கணையத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும், உடல் பருமனை வேகமாக குறைக்கவும், உடல் எடையை சிறப்பாக நிர்வாகிக்கவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 610

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    பெரிய நெல்லிக்காயில் இருக்கும் அமிலம் நீர் வீக்கம் அல்லது உடல் பருமனின் சில அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கும், செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது. நெல்லிக்காய் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயினால் ஏற்படும் எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 710

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    நெல்லிக்காயை எப்படி சாப்பிடலாம் : நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை உள்ளடக்கியது. நாம் நெல்லிக்காயை பல வழிகளில் உட்கொண்டு வருகிறோம். நெல்லிக்காயை பச்சையாக, ஊறுகாய் வடிவில், உலர்ந்த பொடியாக, தேன் நெல்லிக்காய், நெல்லிக்காய் ஜூஸ் வடிவிலும் நாம் உட்கொள்ளலாம். நெல்லிக்காயின் முழு சத்தையும் பெற, அதை நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும்.

    MORE
    GALLERIES

  • 810

  • 910

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் `C' உள்ளது. ஒரு நெல்லிக்காயை ஆறு கீற்றுகளாக நறுக்கி, பெரியவர்கள் தினமும் 2 கிறுக்கள் சாப்பிடலாம். குழந்தைகள் தினமும் ஒரு கீற்று போதுமானது. சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொள்பவர்கள் நெல்லிக்காயை மருத்துவரின் பரிந்துரைகளின் கீழ் எடுத்துக்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 1010

    உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

    முக்கிய குறிப்பு : எல்லா மூலிகை மருந்தும் அனைவருக்கும் நல்ல பலன்களை கொடுக்காது. நெல்லிக்காயை உட்கொள்ளும் போது, செரிமானத்தில் உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, உட்கொள்வதை தவிக்கவும். நெல்லிக்காயை உட்கொள்வதால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது அரிதாகவே காணப்பட்டாலும், எல்லாவற்றையும் அளவாக உட்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES