

பெரிய நெல்லிக்காயில் பல அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலரும் அறிந்ததே. இதை தினமும் சாப்பிட்டு வந்தாலே நோய்கள் அண்டாது என முத்தோர் சொல்லக் கேட்டிருப்போம். அந்த வகையில் சளி, இருமல், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்னைகளுக்கு மருந்தாக உள்ளது. நெல்லிக்காயின் சதைப் பகுதி மட்டுமன்றி அதன் விதை கூட எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களின் வெள்ளைப் படுதலை சரிசெய்ய உதவுகிறது.


நெல்லிக்காய் ஆரஞ்சு பழத்தைக் காட்டிலும் 20 மடங்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதைவிட அதன் விதையில் இருக்கும் மருத்துவ குணங்களும் அதிகம். இந்த விதைகளை காய வைத்து பொடியாக்கி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆயுர்வேத முறையில் பயன்படுத்தப்படுகிறது.


இந்த விதையில் விடமின் பி5, காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. எனவே நெல்லிக்காய் விதையின் பொடியை கடையிலும் வாங்கலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். நீங்கள் நெல்லிக்காயின் விதைகளை காய வைக்காமலே அவற்றை உடைத்து மிக்ஸியின் போட்டு கெட்டியான பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து இறுக்கமான டப்பாவில் மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.


பின் தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவாருங்கள். இவ்வாறு செய்ய அதிகப்படியாக வெளியேறும் வெள்ளைப்படுதலை கட்டுக்குள் கொண்டு வரலாம். வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக நிகழக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அதை கவனத்தில் கொள்வது அவசியம் இல்லையெனில் அவை தொற்றை உண்டாக்கும். இதனால் வெஜினாவில் தொற்று உண்டாகும்.