கூடுதல் எடை அல்லது உடல்பருமன் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உடலை வலுவாக மற்றும் ஃபிட்டாக வைத்திருப்பதில் இப்போதெல்லாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஃபிட்னஸை பெறுவதில் இலக்குகளை அடைவதற்கு எப்போதும் நிலைத்தன்மை அதாவது சீராக மற்றும் தவறாமல் ஒர்கவுட்ஸ்களை செய்வது முக்கியம். ஆனால் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மிகவும் பிரபலமாக உள்ள ஒர்கவுட்ஸ் அல்லது பயனுள்ள ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறார்களே தவிர, சீரான முறையில் எப்போதும் தவறாமல் அவற்றை செய்ய வேண்டும் என்பதில் குறைவாகவே கவனம் செலுத்துகிறார்கள்.
தினசரி நிலையான வொர்கவுட்ஸ்களில் ஈடுபடாவிட்டால் எவ்வளவு தீவிரமான பயிற்சிகளை செய்தாலும் ஃபிட்னஸ் இலக்குகளை அடைய முடியாது. எனினும் வாரத்தின் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கு ஒர்கவுட்ஸ் செய்ய விருப்பம் இல்லாத அல்லது முடியாத நாட்களில் இலக்குகளில் இருந்து விலகி விடாமல் இருக்க உதவும் சில எளிய செயல்களில் ஈடுபடலாம். எடை இழக்கும் முயற்சியில் நீங்கள் ஒர்க்கவுட்ஸ் செய்ய முடியாத நாட்களில் செய்ய கூடிய எளிய விஷயங்கள் இங்கே:
ஸ்டெப்ஸ் கவுன்ட் : உங்களால் ஒர்க்கவுட்ஸ்களில் ஈடுபட முடியாத நாட்களில் குறிப்பிட்ட ஸ்டெப்ஸ்கள் நடப்பதை இலக்காக கொண்டு செயல்படுவது, ஒர்க்கவுட்ஸ்களில் ஈடுப்பட முடியாத குறையை போக்க உதவுகிறது. பிஸியான அல்லது பயிற்சிகளில் ஈடுபட விருப்பம் இல்லாத நாட்களில் போகிற போக்கில் 5000 - 10,000 ஸ்டெப்ஸ் நடக்க இலக்கு வைத்து செயல்படுவது ஒர்க்கவுட்ஸ் செய்ய முடியவில்லையே என்ற உங்களின் குற்றஉணர்ச்சியை போக்கும்.
வாக்கிங் அல்லது ஜாகிங் : உங்கள் எடை இலக்குகளை அடைய எல்லா நாளும் தீவிர ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட தேவைக்கு இல்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள் தீவிரமாக ஒர்க்கவுட்ஸ் செய்ய முடியாமல் போனால் 30 - 45 நிமிடங்கள் மிதமான வாக்கிங் அல்லது மிதமான ஜாகிங் செல்லலாம். ஒரே ஒரு மாற்றம் தான், தீவிர ஒர்கவுட்ஸ்களுக்கு பதிலாக மிதமான ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுவதாக கணக்கில் எடுத்து கொள்ளலாம். இதனால் ஒர்கவுட்ஸ்களில் நீங்கள் நிலைத்தன்மையை பராமரிக்கிறீர்கள் என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.
ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ் : ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட விருப்பம் இல்லாத நாட்களில் அதனை ஈடு செய்ய ஃபுட்பால், கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ் அல்லது உங்களக்கு மிகவும் பிடித்தமான எந்த ஒரு அவுட்டோர் கேம்ஸ்களையும் விளையாடலாம். சுமார் 1 - 2 மணி நேரம் உங்கள் உடல்திறனை பயன்படுத்தி விளையாடுவது ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடாத நாளை மிகவும் பயனுள்ளதாக வைக்கிறது.