நோய் நொடி இல்லாதா ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நம் அனைவருக்கும் ஆசை. ஆனால், அதற்கான வாய்க்கு கிடைப்பதில்லை. ஏனென்றால், நமது வாழ்க்கை முறையும், உணவு முறையும் மாறிவிட்டது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டார்கள். ஆனால், நாம் நேரமின்மை காரணமாக ரெடிமேடு பொருட்களை தேடி செல்கிறோம். முதியவர்களை மட்டுமே தாக்கும் சர்க்கரை நோய் என்ற எண்ணம் போய், நீரழிவு நோய் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமல்ல, இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இந்த பிரச்னை அனைத்திற்கும் ஒரு டம்ளர் வெண்டைக்காய் ஜூஸ் தீர்வு தரும் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?.
வெண்டைக்காய் ஜூஸ் செய்முறை : நடுத்தர அளவிலான 4 முதல் 5 வெண்டைக்காயை எடுத்து, இரு முனைகளையும் நீக்கி, 3 துண்டுகளாக நறுக்கவும். இப்போது, ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, 8 முதல் 24 மணி நேரம் ஊற வைக்கவும். அதை அடுத்த நாள் காலையில் அந்த நீரை வடிகட்டினால், ஓக்ரா ஜூஸ் ரெடி. இதை பருகும் போது மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், அதில் சிறிது உப்பு மற்றும் மிளகு பொடி கலந்து குடிக்கலாம்.
வெண்டைக்காய் சாற்றில் உள்ள வைட்டமின்கள், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அந்த வகையில் இந்த வெண்டைக்காய் ஜூஸினை ‘சர்க்கரை நோயாளிகள்’ நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பருகலாம். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் கொண்ட வெண்டைக்காய் பயன்படுத்தி தயார் செய்யப்படும் சாற்றினை பருகுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.