கடந்த ஒரு வாரமாக மழை மாலை நேரங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் மீண்டுவர முடியாத நிலையில் தற்போது மழைக்கால தொற்று அறிகுறிகளும் வரத் தொடங்கியுள்ளது. இந்த மழைத் தொற்று காரணமாக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் கொரோனா போன்ற தீவிர தொற்றுகளும் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்த வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதை கட்டாயமாக்குங்கள். அதேபோல் நோய் தொற்றுக்குக் காரணமாக இருக்கும் விஷயங்களை தவிர்த்துவிடுதல் நல்லது.