முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » 2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

3வது கட்ட பரிசோதனையில் 2டிஜி பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் 3வது நாளிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையில் இருந்து விடுபடுவதையும் பார்க்க முடிந்ததாக மருத்துவ அறிக்கை கூறியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் இந்த பலன் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

  • 110

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளை உலக நாடுகள் பரிசோதித்துபார்த்துள்ளன. இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட மருந்தும் கொரோனா வைரஸைக் முழுமையாக குணப்படுத்தும் சோதனையில் வெற்றிபெறவில்லை. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2 டிஜி அல்லது 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் எனும் மருந்தை உருவாக்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 210

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    பவுடர் வடிவிலான இந்த மருந்தின் ஆரம்பகால சோதனைகள் வெற்றி பெற்றுள்ளநிலையில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த தேசிய மருந்து ஒழுங்கு முறை அமைப்பு (The national drug regulator) மற்றும் நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (Drugs Controller General of India) ஆகியவை அனுமதி அளித்தன. இதனையடுத்து, 2 -டிஜி மருந்தின் முதல் தொகுப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் திங்கட்கிழமை வெளியிட்டனர்.

    MORE
    GALLERIES

  • 310

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    மருந்து தயாரிப்பு : நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO), அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இதனுடன் ஹைதராபாத்தைக் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மருந்து நிறுவனம் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் (DRL) இணைந்து 2-டிஜி மருந்தை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையிலும் இதனை குறிப்பிட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 410

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    2-டிஜி எப்படி செயல்படுகிறது? : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 2 -டிஜி பவுடரை மருந்தாக உபயோகப்படுத்தியதில், அவர்கள் விரைவாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. பல்வேறு சோதனை தரவுகளிலும் இந்த மருந்தின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2டிஜி மருந்து பாதிக்கப்பட்ட செல்களில் குவிந்து, வைரஸின் ஆற்றல் உற்பத்தியையும், வளர்ச்சியையும் தடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களில், தேர்தெடுக்கப்பட்ட திரட்சிகளில் செயல்படுவது மருந்தின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    2 -டிஜியின் மருத்துவ பரிசோதனை : கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அலை பரவிய சமயத்தில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB), ஐ.என்.எம்.ஏ.எஸ் மற்றும் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளுடன் இணைந்து 2டிஜி மருந்தின் மூலக்கூறுகளை சார்ஸ்கோவிட் 2-வுக்கு எதிராக பயன்படுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 2டிஜி மூலக்கூறு கோவிட் வைரஸ் வளர்ச்சியை தடுத்து திறம்பட செயலாற்றியதை கண்டுபிடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 610

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    இதனடிப்படையில், மே 2020ம் ஆண்டு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கோவிட்-19 நோயாளிகளுக்கு 2-டிஜி மருந்தின் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அனுமதித்தது. டி.ஆர்.டி.ஓ - டி.ஆர்.எல் இணைந்து மே முதல் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 110 நோயாளிகளுக்கு இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், டோஸ் அளவின் அடிப்படையில் 2A - கட்ட சோதனை 6 மருத்துவமனைகளிலும், 2B கட்ட சோதனை 11 மருத்துவமனைகளிலும் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 710

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தரவுகளின் அடிப்படையில் 3வது கட்ட பரிசோதனைக்கு டி.ஜி.சி 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதியளித்தது. 2020 டிசம்பர் முதல் மார்ச் 2021 வரை டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 220 நோயாளிகளுக்கு 27 மருத்துவமனைகளில் தாமதமான சோதனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 810

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    டேட்டா என்ன சொல்கிறது? : கொரோனா பாதித்தவர்களுக்கு 2டிஜி மருத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 2வது கட்ட மருத்துவ பரிசோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் குணமடைவதிலும், ஆக்சிஜன் பற்றாகுறையில் இருந்து மீள்வதிலும் இந்த மருந்து முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளும் பாசிட்டிவான முடிவுகளை கொடுத்திருப்பதாக கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 910

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    2டிஜி மருந்தைப் பயன்படுத்திய நோயாளிகள் நிலையான பாதுக்காப்பைவிட விரைவாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மருந்தின் ஆய்வறிக்கை, நிலையான பாதுகாப்புடன் ஒப்பிடும்போது முக்கிய அறிகுறிகளை இயல்பாக்குவதற்கான சராசரி நேரத்தில் சாதகமான போக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது. 3வது கட்ட பரிசோதனையில் 2டிஜி பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் 3வது நாளிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையில் இருந்து விடுபடுவதையும் பார்க்க முடிந்ததாக மருத்துவ அறிக்கை கூறியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் இந்த பலன் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1010

    2-DG : கொரோனாவை கட்டுப்படுத்த பவுடர் வடிவிலான 2-டியோக்ஸி-டி- குளுக்கோஸ் : முழுமையான தகவல்..!

    நன்மைகள் : 2-டிஜி மருந்து ஒரு பொதுவான மூலக்கூறு மற்றும் குளுக்கோஸ் அனலாக் என்பதால், இதை எளிதாக உற்பத்தி செய்து பெரிய அளவில் கிடைக்கச் செய்யலாம். இந்த மருந்து தூள் வடிவில் ஒரு பாக்கெட்டில் கிடைக்கிறது. இது தண்ணீரில் கலக்கி குடிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

    MORE
    GALLERIES