கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணிபுரியுமாறு கூறியுள்ளனர். இதனால் தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகரித்துள்ளது. ஓய்வெடுக்க நேரம் கிடைக்காமல் உங்கள் வேலை மிகவும் கடினமாக இருக்கிறது என்றால் நாள் முடிவில் நீங்கள் முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். தற்போது முதுகுவலி மிகவும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தினமும் யோகா செய்வது இந்த பிரச்சனையில் இருந்து வலி நிவாரணம் பெற உதவுகிறது.
சஷங்காசனம் (முயல் போஸ்) : சஷங்கா என்ற வடமொழி வார்த்தைக்கு ‘முயல்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலை வளைத்து அமர்ந்திருக்கும் தோற்றம், முயலைப் போலவே இருப்பதால் சஷங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்வதால் முதுகு வலி பிரச்சனை மட்டுமின்றி குடல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள், மலச்சிக்கல் தீரும். ஐலதோஷம், வாயு பிரச்சனை, பசியின்மை போன்றவற்றையும் சரி செய்யலாம்.
ஷவாசனா (சடலம் போஸ்) : ஷவாசனா செய்ய தரையில் அமர்ந்து இருகால்களையும் சம்மனங்கால் போட்டு மடித்து அமருங்கள். முதுகை வளைவு இல்லாமல் நேராக அமருங்கள். தலையும் நேராக இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் முட்டியின் மீது வைத்து மூச்சை 10 நிமிடங்களுக்கு இழுத்துவிடுங்கள். இந்த யோகாவை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.