முகப்பு » புகைப்பட செய்தி » கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

கேழ்வரகு உங்களுக்கு முழுமையான உணவாக இருக்கும். அதேசமயம் இது அனைத்து பருவநிலையிலும் விளையக் கூடிய , எளிதில் பயிடக்கூடிய உணவாகவும் உள்ளது. அதேசமயம் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

  • 16

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    இன்றைய தலைமுறை உணவிலும் பழைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறியத் தொடங்கியுள்ளது. 1950 களுக்கு முன்பு, பார்லி, பழுப்பு அரிசி, தினை மற்றும் கேழ்வரகு போன்ற முழு தானியங்கள் நம் பாரம்பரிய உணவில் பிரதானமாக இருந்தன.அதன் பிறகு அரிசி முழுமையான உணவாக மாறியது. இப்போது மீண்டும் அரிசியை தவிர்த்து விட்டு முழு தானியம் , தினை வகைகளுக்கு மாறுகின்றனர். அந்த வகையில் கேழ்வரகு உங்களுக்கு முழுமையான உணவாக இருக்கும். அதேசமயம் இது அனைத்து பருவநிலையிலும் விளையக் கூடிய , எளிதில் பயிடக்கூடிய உணவாகவும் உள்ளது. அதேசமயம் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே இதை தினசரி உணவாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    கால்சியம் சத்து : கால்சியம் சத்து பெற கேழ்வரகு சிறந்த உணவு. பால் பொருட்களை விரும்பாதவர்களுக்கு கால்சியம் கிடைக்க கேழ்வரகை எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே எலும்பு , பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க கேழ்வரகு சாப்பிடலாம். முதியவர்களுக்கும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு புரை உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் வராமல் இருக்க கேழ்வரகு சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் : கோதுமையுடன் ஒப்பிடுகையில் கேழ்வரகு நீரிழிவு நோயாளிக்கு சிறந்த பலன் அளிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. நீண்ட நேரம் பசியும் எடுக்காது.

    MORE
    GALLERIES

  • 46

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    வயதான தோற்றத்தை குறைக்கும் : உங்கள் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை செலுத்துபவர் எனில் கேழ்வரகு உதவும். இது உங்கள் தோற்றத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது. ஏனெனில் இதி மெத்தியோனைன் மற்றும் லைசின் இருப்பது உங்கள் சருமச் செல்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. விட்டமின் டி யும் இருப்பதால் இது கூடுதல் பலன் தருகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    உடலுக்கு ஓய்வு : மனப்பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற மன ரீதியான பிரச்னைகளை சந்திப்பவர்கள் கேழ்வரகு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முக்கியமாக டிரிப்டோபன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால், அவை இயற்கையான வகையில் ஓய்வு நிலையை தருகிறது.2000 ஆம் ஆண்டில் MedIndia நடத்திய ஆய்வின்படி, கேழ்வரகு நுகர்வு ஒற்றைத் தலைவலிக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் குறைந்தபட்சம் கேழ்வரகு பிஸ்கெட் கூட சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    கேழ்வரகு மாவில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா..? யாரெல்லாம் தினமும் சாப்பிடுவது நல்லது..?

    உடல் எடையை குறைக்க உதவும் : கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதேசமயம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே உடல் எடையை குறைப்பவர்களுக்கு கேழ்வரகு நல்ல உணவாக இருக்கும். கேழ்வரகு சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசிக்காது. உங்களுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. எனவே காலை உணவாக சாப்பிட கேழ்வரகு தேர்வு செய்யுங்கள்.

    MORE
    GALLERIES