சுவாசம் என்பது நம் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியிட உதவுகிறது. இந்த செயலானது மூக்கின் வழியாக நிகழ்கிறது. எந்த உயிரினமும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமும் மூச்சு சுவாசம்தான் . ஆனால் நாசி பகுதியில் அடைப்பு ஏற்பட்டால், குறிப்பாக தூக்கத்தின் போது ஏற்பட்டால் வாய் வழியாக சுவாசிக்கிறோம். இந்த பழக்கம் பாதிப்பில்லாதது என்று நாம் நினைத்தால் அது தவறு.
மூக்கு வழியாக சுவாசிப்பது பல உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறி சில குறிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா.
உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நாசி சுவாசம் முக்கியம். ஏன் இது எடை இழப்புக்குக் கூட உதவுகிறது என்பது தெரியுமா..? அதாவது ஊட்டச்சத்து நிபுணர் "நம் தன்னியக்க நரம்பு மண்டலத்தில் இரண்டு முக்கிய கிளைகள் உள்ளன - சிம்பெதிக் மற்றும் பாராசிம்பெதிக். தூசி, தொற்றுகளை வெளியேற்றுவதில் சிம்பெதிக் கிளை வேலை செய்கிறது. அதேசமயம் பாராசிம்பெதிக் கிளை' ஓய்வு மற்றும் செரிமான போக்குக்கு உதவுகிறது. இதில் சிம்பெதிக் நரம்பு உடல் இயத்தில் ஈடுபடுகிறது. இதனால் சூட்டை உருவாக்குகிறது. பாராசிம்பெதிக் நரம்பு உங்களை குளுர்ச்சியாகவும், கூலாகவும் வைத்துக்கொள்கிறது.
நம் நாசிப் பாதை தடைபட்டால் மட்டுமே நாம் வாய்வழி சுவாசத்திற்கு மாறுவோம். எனவே தூங்கும்போதும் மூக்கின் வழியாக சுவாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதற்கு நல்ல தரமான வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உணவுகள், குர்குமின் (சைனஸ் அடைப்புகளைத் திறக்கிறது), துத்தநாகம் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை உண்மையில் நாசி சுவாசத்தை மேம்படுத்த உதவும். எனவே தூங்கும்போது உங்களு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அனுகுவது நல்லது.