தீபாவளி எப்போதும் மக்களிடையே செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாட்டினை கொண்டு வருகிறது. பண்டிகையின் போது கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் வண்ணமயமான விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படும். தீபாவளி பண்டிகையில் இனிப்புகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. சர்க்கரை உருகிய இனிப்புகள், உப்பு தின்பண்டங்கள் மற்றும் பிற உணவுகள் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன.
நறுமணமும், சுவையும் நம்மை ஏதோ ஒரு இனிமையான சந்தோஷத்தில் ஈடுபடுத்துகின்றன. அவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம் மனதில் எப்போதும் தோன்றும். இதுபோன்ற பண்டிகை இனிப்பு வகைகள் ஏற்கனவே சில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சுகாதார சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் போது சுவையான உணவுகளை அனுபவிப்பது அவர்களுக்கு மிகவும் கடினம்.
பீட் ஓ ஆய்வின்படி, தீபாவளி போன்ற பண்டிகைகள் மக்களின் இரத்த-குளுக்கோஸ் அளவை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் பண்டிகை காலங்களில் 15 முதல் 18 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தீபாவளி பண்டிகை நடைபெறுகிறது. அதே நாளில் உலக நீரிழிவு தினமும் வருகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த உணவுகள், விருந்து மற்றும் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் போது இரத்த-சர்க்கரை அளவை நிர்வகிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை குறித்து காண்போம்:
இந்திய திருவிழாக்கள் எப்போதும் டன் கணக்கில் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளுடன் கொண்டாடப்படுகின்றன. அவை மிக நெருக்கமான நபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றன. எனவே, உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் உங்களுக்கு பிடித்த சுவையான உணவுகளை அனுபவிக்க சரியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் செய்யுங்கள்.