முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் அதிக வெப்பம் நம் உடலை, குறிப்பாக நம் வயிற்றை பாதிக்கலாம். குறிப்பாக வயிற்று பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு அதாவது தொப்பை  நம் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 • 16

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக நேரம் செலவிடுவது, அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபடுவது என பலரும் பிஸியாக இருந்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 26

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  துரதிர்ஷ்டவசமாக கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் அதிக வெப்பம் நம் உடலை, குறிப்பாக நம் வயிற்றை பாதிக்கலாம். குறிப்பாக வயிற்று பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு அதாவது தொப்பை நம் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கோடை வெயிலுக்கு மத்தியில் உங்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு தகுந்த டயட் பிளான் மற்றும் ஆக்டிவிட்டீஸ்களை நீங்கள் தேர்வு செய்வது முக்கியம். அவற்றுள் சில இங்கே...

  MORE
  GALLERIES

 • 36

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  அதிக கலோரிகள் அடங்கிய உணவுகளை குறைத்து கொள்ளுங்கள்: Fisico Diet Clinic-ன் நிறுவனரும் பிரபல டயட்டீஷியனுமான Vidhi Chawla கூறுகையில், தொப்பையை குறைத்து ஃபிளாட்டான வயிறை பெறுவதற்கான முதல்படி கலோரிகள் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்வதே. ஒயிட் பிரெட், பாஸ்தா மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகள், குக்கீஸ், கேக் மற்றும் கேன்டி போன்ற சர்க்கரை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் அதிக கலோரிகளை கொண்டிருப்பதோடு உடல் எடை மற்றும் தொப்பையை எளிதாக அதிகரிக்க செய்கின்றன. இவற்றுக்கு பதில் காய்கறிகள், லீன் ப்ரோட்டீன்ஸ் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளை டயட்டில் சேர்ப்பதில் கவனம் செலுத்தலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நீண்ட நேரம் முழுதாக உணர வைப்பதோடு தேவையற்ற அல்லது அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவும் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் நுகர்வை அதிகரிக்க வேண்டும் : தொப்பையை கரைத்து தட்டையான வயிறை பெற புரதம் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வது அவசியம். சீக்கிரம் பசிக்காமல் நீண்டநேரம் நம்மை வயிறு ஃபுல்லாக இருப்பதை போல உணர வைக்க உதவும் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கும் அவசியமானது. அதே நேரம் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து நம்முடைய செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது, இது வயிற்றை தட்டையாக வைக்க அவசியமானது. எனவே உங்களுக்கு தொப்பை இருந்தால் அதனை குறைக்க லீன் மீட்ஸ், மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் போன்ற பல புரதச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள். தவிர பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ்கள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிகம் சேருங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  டயட்டில் ஹெல்தி ஃபேட்ஸ் சேருங்கள்: பசியின்றி நம்மை முழுதாக உணர வைக்க மற்றும் பசியை குறைக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் (Healthy fats), தொப்பையை குறைக்க அவசியமானவை. நட்ஸ், சீட்ஸ், அவகேடோ மற்றும் ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன என் கூறியுள்ளார் சாவ்லா. Healthy fats அடங்கிய உணவுகள் பசியை கட்டுப்படுத்துவதோடு அதிகம் உணவு சாப்பிடுவதையும் குறைக்கிறது என்கிறார். தவிர வயிற்றை சுற்றியிருக்கும் கொழுப்பை கரைத்து தட்டையாக வைத்திருக்க ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம். எனவே ஆரோக்கிய கொழுப்புகள் அடங்கிய உணவை டயட்டில் சேர்ப்பதோடு தினமும் நிறைய தண்ணீர் குடிக்க நிபுணர் சாவ்லா அறிவுறுத்துகிறார்.

  MORE
  GALLERIES

 • 66

  நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

  நல்ல தூக்கம் & தவறாமல் ஒர்கவுட்ஸ் : தொப்பையை குறைக்க ஆரோக்கியமான உணவுகள் மட்டுமல்ல தினசரி நிம்மதியான மற்றும் போதுமான அளவு தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். தினசரி இரவு 7 - 8 மணி நேரம் தூங்குவதோடு ரன்னிங், நீச்சல் மற்றும் வாக்கிங் போன்றவற்றை உங்கள் வழக்கத்தில் சேருங்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்க, மனநிலையை மேம்படுத்த, பசி மற்றும் அதிகம் சாப்பிடுவதை குறைக்க உதவும். மொத்தத்தில் தினசரி ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுவது தொப்பையை குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

  MORE
  GALLERIES