‘பெல்லி சூப்பலூ’ என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பாதித்த விஜய் தேவரகொண்டா, அதற்கு அடுத்து நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலமாக தெலுங்கில் மட்டுமின்றி ஓட்டுமொத்த தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். அதற்கு அடுத்து ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படம் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறினார். 2019ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் வெளியிட்ட 30 வயதிற்கு உட்பட்ட 30 இளம் சாதனையாளர்கள் பட்டியல், 2018ம் ஆண்டு வெளியான இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் 72வது இடம் என அசத்தி வருகிறார்.
தற்போது விஜய் தேவரகொண்டா பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' உடன் இணைந்து நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சோசியல் மீடியாவிலும் அதிக பாலோயர்களைக் கொண்ட இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, ‘லைகர்’ படத்திற்காக தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.
விஜய்தேவரகொண்டா பதிவிடும் அத்தகைய போட்டோக்களை பார்க்கும் பலருக்கும் தோன்றும் ஒரே கேள்வி, முதல் படத்தில் இருந்தது போலவே இன்று வரை தனது உடலை ஸ்லிம்மாகவும், பிட்டாகவும் பராமரித்து வருகிறார் என்பது தான். விஜய் தேவரகொண்டா தினந்தோறும் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மட்டுமின்றி, சீரான உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு வருகிறார். விஜய் தேவரகொண்டா தனது அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் குறித்து பார்க்கலாம்....
1. தொழில் பக்தி: விஜய் தேவரகொண்டாவிற்கு பள்ளிப் படிக்கும் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக மட்டுமல்ல கனவாகவும் இருந்துள்ளது. எனவே தான் சினிமாவிற்காக தன்னையும், தனது உடலையும் முழு அர்ப்பணிப்போடு பராமரித்து வருகிறார். அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டா கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே உடற்பயிற்சி செய்வதில் தீவிரமான நபராம்.
3. உணவு : விஜய் தேவரகொண்டா தனது உணவில் நிறைய காய்கறிகளை சேர்த்து கொள்கிறார். குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் படி, அந்தந்த சீசன்களில் கிடைக்க கூடிய காய்கறிகளை சாப்பிடுகிறார். ஏனெனில் அத்தகைய காய்கறிகள் வலுக்கட்டாயமாக வளர்க்கப்படவில்லை மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாக இருக்கும் என்பதால், விஜய் தேவரகொண்டாவின் உணவில் எப்போதும் சீசன் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
4. உணவுப்பிரியர்: பல பேட்டிகளில் தான் ஒரு உணவுப்பிரியர் என்பதை விஜய் தேவரகொண்டா பதிவு செய்துள்ளார். உணவுப்பிரியரான விஜய் தேவரகொண்டா பிற நடிகர்களைப் போலவே தானும் குறிப்பிட்ட நாளில் டயட் இல்லாத சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்வாராம். குறிப்பாக அவருக்கு பர்கர் என்றால் கொள்ளை விருப்பமாம். ஆனால் பிற நாட்களில் ஆரோக்கியமான, குறைந்த கலோரிகளை கொண்ட டயட் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார்.
5. ஒர்க்அவுட் கட்டாயம்: உணவு கட்டுப்பாட்டை மட்டுமல்ல, உடற்பயிற்சியும் உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க உதவும் என்பதே விஜய்தேவரகொண்டாவின் பாலிசி. எனவே எந்த அளவிற்கு டயட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறாரோ?, அதே அளவிற்கு தவறாமல் தினந்தோறும் உடற்பயிற்சியும் செய்யக்கூடியவர். குறிப்பாக தனது ஆன் ஸ்கிரீன் லுக்கிற்காக வெயிட் லிப்டிங் போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.