பாலியல் ஆரோக்கியம் குறித்து நாம் நிறைய விஷயங்களை தெரிந்தவராக இருப்போம். குறிப்பாக பாதுகாப்பு அற்ற வாய்வழி புணர்ச்சி அல்லது நேரடி பாலியல் உறவு என்பது செக்ஸ் ரீதியான நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமையும் என்று நமக்கு தெரியும். ஆனால், இதழ் முத்தம் காரணமாக நம் வாய் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
வாயில் ஏற்படும் பிரச்சனைகள் என்பது பாலியல் நோய்கள் அளவுக்கு ஆபத்தானவை அல்ல என்பது உண்மை தான். எனினும், முறையான வாய் சுகாதாரத்தை கடைப்பிடிக்காமல் இதழ் முத்தம் கொடுக்கும்போது, அதன் காரணமாக நிறைய தொற்று பாதிப்புகள் ஏற்படும். அதாவது, வாயில் பாக்டீரியா தொற்று உடைய நபருக்கு இதழ் முத்தம் கொடுக்கும்போது, அவரிடம் இருந்து நமக்கும் அதுபோன்ற பாதிப்பு நமக்கும் ஏற்படும். நமது எச்சில் மூலமாக சுமார் 80 மில்லியன் பாக்டீரியா கடத்தப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பற்சிதைவு : பற்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஸ்டிரெப்டோகோகஸ் மூடன்ஸ் பாக்டீரியா மூலமாக பற்சிதைவு என்ற பூச்சிப்பல் தொந்தரவு ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும் ஆசிட் என்பது நமது பற்களில் சிதைவை ஏற்படுத்துகிறது. இதழ் முத்தம் கொடுக்கும்போது இந்த பாக்டீரியா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக் கூடும்.
ஈறு வீக்கம் : ஈறு வீக்கம் அல்லது ஈறு அழற்சி என்ற பிரச்சனை ஏற்படுகிறது. இதை அலட்சியம் செய்தால் ஓராண்டில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஒருவர் வாயில் இந்த பாக்டீரியா உள்புகுந்து விட்டது என்றால், அவர்களது ஈறுகளில் உள்ள சதையை இது அரிக்கத் தொடங்கும். இதனால், எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்படும்.