சர்க்கரை நோய் (Diabetes)என்பது மிக மோசமான நோயாக உள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இது அதிக அளவில் பெருகி வருகிறது. சிறு வயது முதலே சர்க்கரை நோயினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் சுமார் 537 மில்லியனுக்கும் மேலானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதே போன்று தற்போது இந்தியாவிலும் சர்க்கரை நோயின் பாதிப்பு 74 மில்லியனுக்கும் மேலானோருக்கு உள்ளதாக கூறுகின்றனர்.
சவால்கள் : குளிர் காலங்களில் சர்க்கரை நோயாளிகள் சந்திக்க கூடிய சாவல்கள் சில உள்ளன. உடல் தட்பவெப்ப நிலை குறைதல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தல், அதிக அளவிலான கார்போஹைடிரேட் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகளை எடுத்து கொள்ளுதல் போன்ற முக்கிய சவால்கள் உள்ளன. மேலும் காலையில் எழுந்து உடற்பயிற்சிகள் செய்வதும் இவர்களுக்கு சவாலாக இருக்க கூடும். இதை எப்படி கையாள வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.
சர்க்கரை அளவு : நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கு குளுக்கோமீட்டரை (Glucometer) கையில் வைத்திருப்பது நல்லது. உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போதும், உணவுக்குப் பின் மற்றும் சீரற்ற இரத்த சர்க்கரை அளவு ஆகிய நேரங்களில் சரிபார்க்கவும். ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கப்பட்ட BeatO Curv குளுக்கோமீட்டர் போன்ற புதிய பயன்பாடுகள் இதற்கு அதிகம் உதவும்.இது உங்களை பற்றிய முழு தரவுகளையும் குறிப்பெடுத்து கொள்ள வழி செய்கிறது.
பாதங்கள் : சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்பட்ட சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர் கால் புண் அல்லது தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே இதை பற்றி மருத்துவரிடம் அவசியம் கூற வேண்டும். இல்லையேல் நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, முழு காலையும் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாக்ஸ் மற்றும் நேர்த்தியான பேட் உள்ள காலணிகளை அணிந்து நல்ல பாதுகாப்பை தர வேண்டும். மேலும் குளிர் காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் தோல் வறண்டு போகும். இதனால் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
உடற்பயிற்சிகள் : சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மிக அவசியமானதாகவும். குளிர் காலங்களில் இதை சரியாக செய்வதற்கு பலருக்கு சிரமமாக இருக்கும். இந்நிலையில் தினமும் 30 நிமிடங்கள் கைகளை நன்றாக அசைத்து நடைப்பயிற்சி செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் யோகா போன்ற பயிற்சிகளையும் செய்து வரலாம்.