ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

கொய்யா இலைகள் சிறிதளவு மென்று வலி இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால் வலி குறையும். மேலும் பற்களை பளிச் என வைத்திருப்பதற்கும் உதவியாக உள்ளது.

 • 15

  பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

  “ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி“ என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். முன்பெல்லாம் சாம்பல், உப்பு, ஆலங்குச்சி, வேப்பங்குச்சி தான் பலரின் பற்பொடியாக இருந்தது. ஆனால் இன்றைக்குச் சந்தைகளில் பல்வேறு பெயர்களில் விலையுயர்ந்த பற்பொடிகள் விற்பனையாவதை நாம் பார்க்கிறோம். என்ன தான்? இவற்றை நாம் பயன்படுத்தினாலும் பற்கள் வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழும்புகிறது. எனவே நம்முடைய முன்னோர்கள் போல் இயற்கையான முறையில் பற்களைப் பளபளப்பாக்கவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்வெல்லாம் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.. பற்களை வெண்மையாக்குவதற்கான வீட்டு வைத்திய குறிப்புகள்..

  MORE
  GALLERIES

 • 25

  பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

  பேக்கிங் சோடா : பற்களில் உள்ள கிருமிகள் மற்றும் தொற்றுக்களை நீக்க வேண்டும் என்றால் நீங்கள் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். சிறிதளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடாவைக் கலந்து நாம் பல் துலக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்கும் போது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைப்பதோடு பற்களை வெண்மையாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

  கிராம்பு : பல் வலி என்றாலே கிராம்பு தான் நமது நினைவிற்கு வரும். கிராம்பு சாற்றில் யூஜெனால் எனும் ரசாயனம் உள்ளதால் பற்கள் வலிக்கும் இடத்தில் கிராம்பை வைக்கும் போது மரத்துப் போக வைத்து வலியைக் குறைக்கும். இதோடு ஈறுகளில் வீக்கம், பல்வலி ஏற்படுவதையும் தடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 45

  பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

  கொய்யா : பொதுவாக எந்தவொரு தாவரத்தின் பழங்கள் மற்றும் இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கொய்யா இலை பற்களின் வலியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது. நீங்கள் கொய்யா இலைகள் சிறிதளவு மென்று வலி இருக்கும் இடத்தில் வலி இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால் வலி குறையும். மேலும் பற்களை பளீச் என வைத்திருப்பதற்கும் உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  பற்கள் பளிச் என வெண்மையாக வேண்டுமா? விலையுயர்ந்த பற்பசை வேண்டாம்... இத மட்டும் பயன்படுத்துங்க..!

  கற்றாழை ஜெல் : பளிச்சிடும் வெண்மையான பற்களுக்கு கற்றாழை மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. எனவே கற்றாழை ஜெல், நான்கு டீஸ்பூன் கிளிசரின், பேக்கிங் சோடா, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பற்களைத் தேய்க்கும் போது பற்களில் மறைந்திருக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதை தொடர்ந்து 3 அல்லது 4 நாள்களுக்கு தொடர்ச்சியாக செய்து வந்தால் பற்களை பிரகாசமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES