கொசுக்களின் உற்பத்தி மழை காலங்களில் அதிக அளவில் இருக்கும். இதனால் டெங்கு, மலேரியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் தாக்குதல்கள் நமது உடலுக்கு கொசுக்களால் உண்டாகும். குறிப்பாக மழை காலங்களில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதை தடுக்க வீடுகளை சுற்றி இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போன்ற இடங்களில் இருந்து தான் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.
மேலும் மழை காலத்தில் முழுக்கை உடைகளை அணிவது நல்லது. இதை மீறியும் உங்களுக்கு ஒருவேளை டெங்கு காய்ச்சல் வந்தால் அவற்றை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். குறிப்பாக தசை வலி, எலும்புகளில் வலி, மூட்டு வலி, ரேஷஸ், அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது டெங்குவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. டெங்கு காய்ச்சல் குணமான பிறகும் சில பக்க விளைவுகள் உடலில் ஏற்படக் கூடும். அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
முடி உதிர்வு: டெங்குவில் இருந்து குணமடைந்த பலருக்கும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். 1-2 மாதங்கள் வரை முடி கொட்டும் பிரச்சனை இருக்க கூடும். சிலருக்கு டெங்கு காய்ச்சல் வந்த பிறகு தலையில் சில இடங்களில் மட்டும் வட்ட வட்டமாக முடி இல்லாமல் போகும். டெங்குவின் போது எடுத்து கொண்ட மருந்துகளாலும், ஹார்மோன் பாதிப்புகளாலும், அதிக தொற்றினாலும் இப்படி உண்டாகலாம்.
பசியின்மை: டெங்கு காய்ச்சலானது உங்களின் செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். எனவே டெங்கு வந்த பிறகு உங்களுக்கு அதிக அளவில் பசியின்மை போன்ற உணர்வு ஏற்படும். இதனால் உடலுக்கு தேவையான உணவை உங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற நேரங்களில் நீராகாரங்களை எடுத்து கொள்ளலாம். இவை எளிதாக செரிமானமாகி விடும்.