உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய புதிய நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கொரொனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, மாறுபட்ட கொரோனா வைரஸ் என மாறி மாறி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் வயதானவர்களின் மரணம் என்பது அதிகளவில் ஏற்பட்டதை நாம் கண்கூடப்பார்த்திருப்போம். ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் இருந்தாலும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான் மரணங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என விட்டுவிட்டோம்.
ஆனால் கொரோனா தொற்றை விட டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் மிகுந்த ஆபத்தானது என்றும்,வயதானவர்களுக்கு இது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மரணம் வரை கொண்டு சென்று விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றது. டிமென்ஷியா மற்றும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், டிமென்ஷியா நோயறிதலுடன் தொடர்புடையது என்றும் கோவிட் காலக்கட்டத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் போது, இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது கண்டறியப்பட்டது.
ஆம் வயது, பாலினம், புற்றுநோய், நீரழிவு நோய், கொழுப்பு வளர்சிதை மாற்றக்கோளாறு, உடல் பருமன், இதய செயலிழப்பு, மல்டிவேரியபிள் லாஜிஸ்டிக் ரிக்ரெஷன் மூலம் டிமென்ஷியா மற்றும் இறப்பு இடையேயான தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொரோனா நோயினால் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்ட 28, 311 நோயாளிகளில் 3,317 ( 11.3 சதவீதம்) பேர் டிமென்ஷியா நோயறிதலைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் படி SARS-CoV-2 காலப்போக்கில் மாறிவிட்டது மற்றும் தடுப்பூசி செலுத்தினால் பலரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இருந்தப்போதும் இந்நோயின் இறப்புக்கான ஆபத்து காரணங்களைக் கண்டறிந்து, தடுப்பதோடு சிகிச்சைகள் அளிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே உடல்நலத்தை அவ்வப்போது சோதனைகள் செய்து சிகிச்சைகள் மேற்கொண்டாலே எந்த நோயைக்கண்டும் நாம் பயப்படத் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக ஞாபக மறதியால் வயதானவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலையில், அவர்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மற்ற ஆண்டுகளைவிட இந்தாண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு மட்டும் நீரழிவு நோய், சுவாச நோய், புற்றுநோய், டிமென்ஷியா போன்றவற்றால் அதிக மரணம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதோடு தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பாவி வரும் நிலையில், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.