ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

கழுத்தில் கருமை ஏற்படுவது சில நோய்த்தொற்றுகள் அறிகுறியாக கூட இருக்கலாம். இது ஒரு நோயல்ல என்றாலும், இது அடிக்கடி உண்டாகும் தோல் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை சரியாக கண்டறிந்து, சிகிச்சை பெறுவது அவசியம்.

 • 17

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தில் மாற்றம் உள்ளதா? கழுத்தைச் சுற்றி தடித்து அரிப்பு ஏற்பட்டு, தோல் கருமையாக இருப்பது ஒரு பொதுவான நிகழ்வு. சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகள், போன்றவை கழுத்தின் நிறமாற்றத்திற்கு முக்கிய காரணிகளாகும். இது போன்று கழுத்து பகுதி கருமை பெறுவது என்பது எல்லா வயதினருக்கும் அடிக்கடி ஏற்படுகிறது. இது பெரிதாக பாதிப்பை விளைவிப்பதில்லை என்றாலும், கழுத்தின் தோற்றத்தை மோசமாக்குகிறது. எனவே, இந்த பதிவில் இது குறித்த விரிவான காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  ஹைப்பர் பிக்மென்டேஷன் : ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது தோலின் திட்டுகள் சுற்றியுள்ள பகுதிகளை விட கருமையாக மாறும். தோல் அதிகப்படியான மெலனின் உற்பத்தி செய்யும் போது இந்த நிலை ஏற்படுகிறது, இது சருமத்திற்கு அதன் நிறத்தை கொடுக்கும் நிறமி ஆகும்.

  MORE
  GALLERIES

 • 37

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  சூரிய வெளிப்பாடு & இரசாயனங்கள் : அதிக சூரிய ஒளி படுவதாலும் கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோல் கருமையாகும். அடுத்து தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் காணப்படும் இரசாயனங்கள் சருமத்தை கருமையாக்கும் தன்மை கொண்டவை. இத்தகைய பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 47

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  நோய்த்தொற்றுகள் : பூஞ்சை தொற்று அல்லது அரிக்கும் தோலழற்சி ஆகிய சில காரணங்களினால் கழுத்து பகுதியில் கருமை ஏற்பட வாய்ப்புள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  நோய் கண்டறிதல் : கழுத்தில் கருமை ஏற்படுவது சில நோய்த்தொற்றுகள் அறிகுறியாக கூட இருக்கலாம். இது ஒரு நோயல்ல என்றாலும், இது அடிக்கடி உண்டாகும் தோல் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை சரியாக கண்டறிந்து, சிகிச்சை பெறுவது அவசியம். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பிடுவதற்கு உங்கள் தோல் பரிசோதனை உட்பட முழுமையான உடல் பரிசோதனையை உங்கள் உடல்நலப் பராமரிப்பு நிபுணர் மேற்கொள்வார். உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில், நீரிழிவு மற்றும் ஹைப்போ தைராய்டிசத்தை பரிசோதிக்க, இரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே மற்றும் பிற நோய்களை கண்டறியும் பரிசோதனைகளை இவர்கள் பரிந்துரைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  சிகிச்சை : கழுத்து பகுதியில் கருமை ஏற்படுவதற்கான காரணத்தைப் பொறுத்து, கழுத்து கருமைக்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இந்த பாதிப்புக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டால் இது காலப்போக்கில் மறைந்துவிடும். லேசர் சிகிச்சை, கெமிக்கல் பீல்ஸ், மைக்ரோடெர்மாபிரேஷன், வீட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்து கிரீம்கள் போன்ற சிகிச்சை முறைகள் இதில் அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  உங்கள் கழுத்து கருமையாக இருந்தால் அலட்சியமா விடாதீங்க.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்..!

  உங்கள் கழுத்தைச் சுற்றி கருமையான நிறமிகள் உருவாகாமல் இருக்க உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பும், கவனமும் தேவை. எனவே, பாதிப்பை குணப்படுத்துவதை விட அதை தடுப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே சரியான தோல் பராமரிப்பு முறைகளை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES