நகரும்போது அல்லது ஓடும்போது செலவாகும் ஆற்றலை விட உட்கார்ந்து இருக்கும்போது குறைவான ஆற்றலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், உடல் பருமன், அடிவயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது அதிகரிக்கும் எனத் தெரிவிக்கும் ஆய்வுகள், கடுமையான நீரிழிவு நோய், இதயநோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றன.
ஃபோர்டிஸ் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் விவேக் மகாஜன் பேசும்போது, உட்கார்ந்து வேலை செய்வதற்கும், உடல் நல பாதிப்புகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளாக சுட்டிக்காட்டியுள்ளார். 8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு நாளைக்கு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கத்தால் இறப்பவர்களுக்கு இணையான பாதிப்பை எதிர்கொள்வதாகவும், உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார். பகல் நேரங்களில் குறைவாக உட்கார்தல் அல்லது படுத்துறங்குதலை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம் என மருத்துவர் விவேக் மகாஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு பலர் மாறியிருப்பதால், அவர்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். நேராக நிமிர்ந்து இருக்கும்போது இயல்பாக இருக்கும் குடல் செயல்பாடு, படுத்திருக்கும்போது உட்கார்ந்து இருக்கும்போது அவற்றில் செயல்பாடுகள் பாதிப்பது இயல்பான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் : கால் மற்றும் கிளட்டியல் தசைகள் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது பலவீனமடைகின்றன. இந்த தசைகள் நடக்கும்போது நிலையாக இருப்பதில் முக்கிய பங்கும் வகிக்கும் பெரிய தசைகள், பலவீனமடைந்தால் கீழே விழும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது அடிக்கடி காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
* தசைகள் இயங்கும்போது உண்ணும் உணவு மற்றும் சர்க்கரை எளிதாக ஜீரணிக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது தசைகளுக்கு போதுமான வேலை இல்லாததால் செரிமானத்திலும், சர்க்கரைகளை ஜீரணிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், கொழுப்பு மற்றும் சர்க்கரைகள் அப்படியே உடலில் தேக்கமடைகின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தால் இதயநோய் பாதிப்பு உருவாகிறது.